அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை முனைப்புடன் நிறைவேற்றுவேன் என்று புதிய கலெக்டராக பதவி ஏற்ற க.நந்தகுமார் கூறினார்.

புதிய கலெக்டர்

பெரம்பலு£ர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து வந்த க.நந்தகுமார் 20–ந்தேதி நியமனம் செய்யப்பட்டார். பெரம்பலூரில் இருந்து பணிமாற்றலாகி செல்லும் கலெக்டர் டாக்டர் தரேஸ்அஹமதுவிற்கு இன்னும் பணியிடத்தை தமிழகஅரசு உறுதி செய்யவில்லை.

இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட புதிய கலெக்டராக க.நந்தகுமார் நேற்று காலை 10மணிக்கு பதவி ஏற்றார். அவரிடம் பணிமாற்றலாகி செல்லும் கலெக்டர் தரேஸ்அஹமது, மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி மீனாட்சி, பெரம்பலூர் வருவாய் கோட்ட உதவி கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உடனிருந்தனர்.

வளர்ச்சி பணிகள்

அப்போது நிருபர்களிடம் பேசிய புதிய கலெக்டர் நந்தகுமார், முந்தைய கலெக்டர் தரேஸ்அஹமது பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிக்காக எடுத்துக்கொண்ட திட்டங்களுக்கு முன்உரிமை கொடுத்து அப்பணிகளை முனைப்புடன் நிறைவேற்ற உள்ளதாகதெரிவித்தார். அதன்பின்பு அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு, பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிக்கான பணிகளை தொடரும் நோக்கில் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

வாழ்க்கை குறிப்பு

நாமக்கல் பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணப்பன்–லட்சுமி தம்பதியரின் மகனான கலெக்டர் நந்தகுமார் 1982–ம் ஆண்டு ஜூன் 7–ந்தேதி பிறந்துள்ளார். பொள்ளாச்சியில் என்ஜினீயரிங் படித்துவிட்டு ரெயில்வேயில் சிறிதுகாலம்பணிபுரிந்தார்.

பின்பு 2006–ல் நந்தகுமார் தமிழ்இலக்கியத்தையும், பூகோளத்தையும் விருப்பபாடமாக எடுத்து ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுதி தமிழக அளவில் முதலாவது இடத்தை பெற்றார். 2007–ல் கோவையில் பயிற்சி உதவி கலெக்டராகவும், 2009–ல் வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் உதவி கலெக்டராகவும் பணிபுரிந்து 2010–ல் தமிழக அரசின் நிதித்துறை சார்பு செயலாளராகவும், 2011–ல் அரசு துணை செயலாளராகவும் பணிபுரிந்தார்.

அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு 11.2.2012 முதல் பணியாற்றி வந்த இவர் 20.1.2016 வரை பணிபுரிந்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-