அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஆடு மேய்த்த பெண்ணை பலாத்கார முயற்சிபெரம்பலூர், : பெரம்பலூர் அருகே காட்டில் தனியாக மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற லாரி டிரைவர், பொதுமக்கள் வந்ததால் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். பெரம்பலூர் மாவட்டம்  மங்களமேடு அடுத்த ரஞ்சன்குடி பகுதியை சேர்ந்தவர் கயல்விழி (25). (பெயர் மற்றப்பட்டுள்ளது). இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு அடுத்த முருக்கன்குடி பிரிவு சாலையில் கிழக்கு பகுதியில் தனது வயலில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. லாரி டிரைவர் லாரியை முருக்கன்குடி பிரிவு சாலையில் நிறுத்தி விட்டு, தனியாக நின்ற கயல்விழியிடம் சென்று தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு கயல்விழி கிணற்றின் அருகே உள்ள தொட்டியில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் லாரி டிரைவர் கயல்விழி கூறியதை கேட்காமல் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சியடைந்த கயல்விழி கூச்சல்போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பொது மக்கள் ஓடி வருவதை கண்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனடியாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-