அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குன்னம் அருகே குடியிருப்பு பகுதியில் பெண் உடலை அடக்கம் செய்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மனைவி நஜிபூநிஷா (வயது 52). கடந்த இரண்டு வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து கிழக்கு ஜமாத் பகுதியில் முறைப்படி அடக்கம் செய்ய நேற்று காலை நஜிபூநிஷாவின் உடலை உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது முகமது ரபீக்கிடம் உங்கள் மனைவியின் உடலை இங்கு அடக்கம் செய்ய கூடாது. மேலும் உங்கள் மகன் திருமணத்தின் போது நீங்கள் ஜமாத் நிபந்தனைகளுக்கு கட்டுப்படவில்லை என்று கூறி கிழக்கு ஜமாத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து முகமது ரபீக் உறவினர்கள் வேறு ஜமாத்திற்கு சென்று நஜிபூநிஷா உடலை தங்கள் பகுதியிலுள்ள அடக்க தளத்தில் அடக்கம் செய்ய கேட்டு உள்ளனர். அதற்கு கிழக்கு ஜமாத்தாரின் அனுமதியின்றி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

சொந்த இடத்தில் அடக்கம்

இதையடுத்து நஜிபூநிஷாவின் உடலை ஜமாலியா நகரில் உள்ள முகமது ரபீக்குக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். இதை அறிந்த கிழக்கு ஜமாத்தார் குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதை அறிந்த மற்றொரு ஜமாத்தார் முகமது ரபீக்குக்கு ஆதரவு தெரிவித்தனர். அதை தொடர்ந்து நஜிபூநிஷாவின் உடல் ஜமாலியா நகரில் முகமது ரபீக்குக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சாலை மறியல்

இந்நிலையில் ஜமாலிய நகர் குடியிருப்பு பகுதி என்பதால் இறந்தவரின் உடலை இப்பகுதியில் அடக்கம் செய்ய கூடாது. எனவே அடக்கம் செய்த உடலை தோண்டி அப்புறப்படுத்த வேண்டுமென கூறி ஒரு தரப்பினர் லப்பைக்குடிக்காடு பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
இத் தகவலை அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்
பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுனர். அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நஜிபூநிஷாவின் உடல் அவரது சொந்த இடத்திலேயே அடக்கம் செய்ததற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்ததால் அரை மணி நேரம் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து
சென்
றனர்.
உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதற்கும், அடக்கம் செய்த உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்திட வலியுறுத்தியும் நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-