அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை பார்த்து கண்ணீர் விட்டு அழுத தனது மனைவியை திருமணம் முடித்து ஒரு மாதத்திற்குள் சவூதி அரேபிய கணவர் ஒருவர் விவாகரத்து செய்துள்ளார்.


கணவர் வீடு திரும்போது மனைவி அழுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். குடும்பத்தினர் யாருக்காவது ஏதாவது நிகழ்ந்திருக்கும் என்ற பயத்தில் மனைவியிடம் அழுவதற்கான காரணத்தை கேட்டுள்ளார்.


அப்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தும் நியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டதற்கு கவலையில் அழுவதாக அந்த மனைவி குறிப்பிட்டுள்ளார்.


அதிர்ச்சி அடைந்த கணவர் கோபத்தோடு, “தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் வெளியேறிவிட்டார். நீ விட்டை விட்டு வெளியேறிவிடு” என்று திட்டியதாக சவூதியின் அல் மர்சாத் இணைய செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.


தன்னை மதிக்காமலேயே மனைவி வேறு ஒரு ஆணுக்காக அழுததாக அந்த கணவன் குற்றம்சாட்டியுள்ளார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-