அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

17:07:38

டெல்லி : இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் பல்வேறு சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. பாரத தர்ஷன் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அந்தமான், கோவா மற்றும் பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது துபாய் மற்றும் இலங்கை செல்ல புதிய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, துபாய் உலக ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்கும் வகையில் வரும் 30-ம் தேதி மற்றும் 18-ம் தேதிகளில் சென்னையில் இருந்து விமானம் புறப்படுகிறது. இந்த சுற்றுலா பயணம் மொத்தம் 4 நாட்கள், இதற்கான கட்டணம் ரூ.58,700 வாங்கப்படுகிறது.

வரும் 23-ம் தேதி சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானம் புறப்படுகிறது. இந்த சுற்றுலா பயணம் மொத்தம் 5 நாட்கள் கொண்டதாக இருக்கும். விமான பயணச்சீட்டு, மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் விடுதி, சுற்றிப்பார்க்க ஏசி குளிர்சாதன வாகனம், உணவு, பயணக்காப்பீடு உள்ளிட்டவை அடங்கும் என்று ஐஆர்சிடிசியின் கூடுதல் பொதுமேலாளர் எல்.ரவிக்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட சுற்றுலாக்களுக்கு முன்பதிவு செய்ய சென்னை: 9840902919, 9003024169 மதுரை: 9840902915, கோயம்புத்தூர்: 9003140655 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-