அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கந்தர்வக்கோட்டை, ஜன. 11–

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வேம்பன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். விவசாயி. இவரது மகன் முனியப்பா (வயது 21). 10–ம் வகுப்பு படித்துள்ள இவர் கடந்த 13 மாதங்களுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்றார்.

அங்கு சென்ட்ரிங் வேலைக்கு சென்ற அவர் உடன் வேலை செய்யும் தொழிலாளர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த 1–ந்தேதி வீட்டுக்கு போனில் பேசிய அவர் அதன் பின் பெற்றோரை தொடர்பு கொள்ள வில்லை.

இதையடுத்து முனியப்பாவின் பெற்றோர் துபாயில் அவருடன் பணிபுரியும் உறவினர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது முனியப்பா 2–ம் தேதி காலையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த முனியப்பாவின் பெற்றோர் கதறினர்.

பின்னர் மகனை யாரோ அடித்துக் கொன்றுள்ளதாகவும், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், மற்றும் டெல்லியில் உள்ள இந்திய தூதரகம், திருச்சி தொகுதி எம்.பி. குமார் ஆகியோரிடமும் மனு கொடுத்துள்ளனர்.

மேலும் முனியப்பாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து முனியப்பாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளனர்.

கந்தர்வக்கோட்டையில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற வாலிபர் அங்கு கொலை செய்யப்பட்டதால் அவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-