அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஃபேஸ்புக்கில் நபிகள் குறித்த கீழ்த்தரமான அவதூறுகளைப் பதிவிட்ட வந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கல்யாண்ராமன் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


BJP man arrest for posting abusive Facebook comments
ராஷ்டிரிய சேவா சங்கத்தை [ஆர்.எஸ்.எஸ்] சேர்ந்த கல்யாண்ராமன் என்பவர், பல்வேறு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவாக பேசி வருபவர். அதேபோல் சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார்.


இந்நிலையில், கல்யாணராமன் மீது மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவஹிருல்லா புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இன்று கல்யாண்ராமன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜவஹிருல்லா, ”சிறுபான்மையினர், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வதை முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கும் சங் பரிவாரைச் சேர்ந்த கல்யாண் ராமன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த டிசம்பர் 30 அன்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் திருமிகு டி.கே. ராசேந்திரன் இ.கா.ப. அவர்களிடம் நேரில் முறையிட்டோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-