அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பேஸ்புக் தளமானது அனைவராலும் பயன்படுத்தப்படக்கூடிய உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமாகும். இதனை கணினி மூலமாகவும் ஸ்மார்ட் போன்கள் டேப்லெட் சாதனங்கள் ஊடாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இருப்பினும் இன்று அதிகமானவர்கள் பேஸ்புக் தளத்தை பயன்படுத்த தமது ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துகின்றனர். எனவே தமது ஸ்மார்ட் போன்கள் மூலம் பிடிக்கக்கூடிய புகைப்படங்களை பேஸ்புக் தளத்தில் தானாகவே தரவேற்றிக் கொள்வதற்கு பேஸ்புக் சின்க் (Sync) வசதி தரப்பட்டிருந்து.

இந்த வசதி மூலம் எமது ஸ்மார்ட் போனின் கேலரியில் உள்ள அனைத்து புகைப்படங்களையுமோ அல்லது நாம் பிடிக்கும் புதிய புகைப்படங்களை மாத்திரமோ தானாகவே சின்க் செய்து கொள்ள முடியும்.

இவ்வாறு பேஸ்புக் தளத்திற்கு சின்க் (Sync) செய்யப்படும் புகைப்படங்களை குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கை பயன்படுத்துபவரால் மாத்திரமே பார்க்க முடியும். பேஸ்புக் மூமன்ட்ஸ் (Moments)
எனினும் மேற்குறிப்பிட்ட இந்த வசதியை எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் நிறுத்த இருப்பதாகவும் இதற்கு பதிலாக மூமன்ட்ஸ் செயலியை பயன்படுத்துமாறும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த மூமன்ட்ஸ் எனும் செயலி மூலம் அருமையான பல வசதிகளை பெற்றுக்கொள்ள முடிகின்றது.
உங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் நீங்கள் கலந்து கொள்ளும் விசேட வைபவங்கள், சுற்றுலாக்கள், மற்றும் ஏனைய நிகழ்வுகளின் போது நீங்கள் அவர்களுடன் பிடிக்கக்கூடிய புகைப்படங்களை இந்த மூமன்ட்ஸ் எனும் செயலி ஆல்பம் அடிப்படையில் வேறு பிரித்துத் தருவதுடன் அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் அவற்றை நீங்கள் விரும்பும் உறவினர்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வசதிகளை தருகின்றது.

மேலும் நீங்கள் பிடிக்கக்கூடிய புகைப்படத்தில் உள்ள உங்கள் நண்பரை சரியாக இனங்கண்டு கொள்ளும் வகையில் இதில் Facial recognition எனும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் புகைப்படங்களை நீங்கள் உங்களது ஸ்மார்ட் போன் மூலம் பிடித்திருந்தால் அவர்களை சரியாக இனங்கண்டு குறிப்பிட்ட புகைப்படத்தை உரிய நண்பருக்கு மிக இலகுவாக அனுப்ப முடியும்.

உங்கள் உறவினர்/நண்பர்கள் மூமன்ட்ஸ் செயலியை இது வரை பயன்படுத்தவில்லை எனின் அவருக்கு நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் ஆல்பங்கள் போன்றன பேஸ்புக் மேச்சென்ஜர் மூலம் அனுப்பப்படும். எனினும் மூமன்ட்ஸ் செயலியை பயன்படுத்தும் உங்கள் நண்பர்களை அறிந்து கொள்வதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

இவைகள் தவிர இந்த செயலி மூலம் தானாக பரிந்துரைக்கப்படும் ஆல்பங்களுக்கும் மேலாக உங்கள் புகைப்படங்களை கொண்டு நீங்களாகவே ஆல்பங்களை உருவாக்கி அவற்றை நீங்கள் விரும்பும் உறவினர்கள் நண்பர்களுடன் பகிந்து கொள்ள முடியும்.

மேலும் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பிடித்துக் கொண்ட புகைப்படங்கள் உங்கள் நண்பரின் மொபைல் சாதனத்தில் இருப்பின் இந்த செயலி மூலம் அதனை தனக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கவும் முடியும்.

அத்துடன் உங்கள் ஸ்மார்ட் போனில் எந்தெந்த கோப்புறைகளில் இருக்கும் புகைப்படங்கள் மூமன்ட்ஸ் செயலியில் தோன்ற வேண்டும் என்பதையும் இந்த செயலியின் செட்டிங்ஸ் பகுதி மூலம் தெரிவு செய்து கொள்ளலாம்.

இதனை ஆண்ட்ராய்டு போன்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் ஐபோன்களுக்கு ஆப் ஸ்டோரில் இருந்தும் தரவிறக்கிக் கொள்ள முடியும்.

தமிழ் இன்ஃபோ டெக்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-