அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர் (விஏஒ) பணியில் 813 காலியிடங்களுக்கான தேர்வு நடத்திட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு அடுத்த மாதம் 28ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்விற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. இவ்வகுப்பில், முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மேலும், வாரம் ஒருமுறை மாதிரி தேர்வு மற்றும் பயிற்சி இறுதியில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-