அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 புதுடில்லி,:''சாலை விபத்தை பார்த்தவர்கள், அந்த தகவல் மற்றும் படத்தை, 'வாட்ஸ் ஆப்' வழியாக அனுப்பினால் போதும்; பல உயிர்களை காப்பாற்றலாம்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதின் கட்காரி கூறினார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது: சாலை விபத்துக்களை தடுப்பதில், விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுவதில், இன்டர்நெட் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். விபத்துகளை பார்த்தால், அதை, அலைபேசியில் படம் எடுத்து, வாட்ஸ் ஆப் மூலம், மருத்துவமனை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பினால் போதும்; அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவர்.அடுத்த ஐந்தாண்டுகளில் விபத்துகளின் எண்ணிக்கையை, 50 சதவீதம் குறைக்க வேண்டும். விபத்து அதிகம் நடப்பதற்கு போலி டிரைவர்களும் காரணம். ஓட்டுனர் உரிமங்களில், 30 சதவீதம் போலி என்பதுடன், டிரைவர்களில் பலர், கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும் வேதனை.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-