அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


Close up of a woman with hands holding her crotch in an emergency room மாதவிடாய் காலம் பெண்களுக்கு மிகுந்த வேதனையை தரும் காலமாக அமைகின்றது. உடலில் வலி, வயிறு மற்றும் கீழ் வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும் ஈரமாக இருக்கும். இரத்தப் போக்கும் சராசரியாக மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இருக்கும். இந்த ஈரத்தன்மையினால் தொடைப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள தோல் உரிந்து அரிப்பு, சொறி ஆகியவை ஏற்படலாம். சிவப்பு நிற புண்களும் வர வாய்ப்புகள் உள்ளன.

சொறி மற்றும் புண்களால் மிகுந்த அரிப்பு ஏற்படுகின்றது. இதனால் அந்த இடங்களில் இறுக்கமான ஆடைகளை அணியமுடிவதில்லை. நாம் பயன்படுத்தும் சானிட்டரி பேட் நல்ல நிறுவனத்தின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் இத்தகைய பிரச்னைகள் வருவது இயல்பு. ஒரு வேளை நாம் துணியை பயன்படுத்தினால் கூட இந்த பிரச்சனை வரக்கூடும். இத்தகைய சொறியை குணப்படுத்தவும் மற்றும் அவை மீண்டும் வராமல் தடுக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பார்க்காலம்.

நமது பிறப்புறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கழுவி சுத்தமாக வைக்க வேண்டியது அவசியமாகும். நிறைய தண்ணீரைப் பயன்படுத்துங்கள். அந்த இடத்தை கழுவி மற்றும் சுத்தமாக துடைத்த பின், சானிட்டரி பேடை பயன்படுத்தினால் நீண்ட நேரம் உலர்வாக இருப்பதையும் சுகமாக இருப்பதையும் நீங்கள் உணர்வீர்கள். சானிட்டரி பேட் அல்லது துணி என எதுவாக இருந்தாலும் 8-9 மணி நேரத்திற்குப் பயன்படுத்துவது சுகாதாரமற்றதாகும்.

இப்படி நாம் பயன்படுத்தும் போது தான் சொறி மற்றும் புண் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகையால் அவ்வப்போது அவற்றை மாற்ற மறந்து விடாதீர்கள். அதை மாற்றும் போதும், நன்கு கழுவி துடைத்த பின்னும் புதிய சானிட்டரி பேடை பயன்படுத்தினால் சிறந்த பலனைப் பெற முடியும். இந்த சானிட்டரி பேட் அல்லது நாப்கின்களை குறித்த காலத்தில் தவறாமல் மாற்றி அரிப்புகள் ஏற்படாத பீரியட்களை எதிர்கொள்ளுங்கள்.

சொறி மற்றும் அரிப்புகளை ஆற்றிட நமது அங்காடிகளில் கிடைக்கும் நல்ல ஆன்டி-செப்டிக் அல்லது கிருமிகளை கொல்லும் மருந்துகள் திரவ வடிவிலும், பாதியளவு திரவமாகவும் கிடைக்கின்றது. அதை பயன்படுத்தலாம். ஆனால் இவற்றைப் பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனைகளை கேட்பது சிறந்தது. ஒரு வேளை இதை பயன்படுத்தி எரிச்சல் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக கழுவிட வேண்டும். மீண்டும் பயன்படுத்த வேண்டாம். பாராஃபின் எண்ணெயும் சிறந்த குணமளிக்கும் திரவமாக உள்ளது.

இதை பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தும் போது மிகுந்த ஆறுதல் கிடைக்கும். அந்த இடத்தை கழுவி சுத்தமாக துடைத்து விட்டு. பவுடரை அந்த இடத்தில் போட்ட பின் சானிட்டரி பேடை பயன்படுத்துவது உகந்தது. இது பிறப்புறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை உலர்வாகவும், சுகமாகவும் வைக்க உதவும். இத்தகைய வழிகளை பயன்படுத்தினாலே போதும் சொறி, வெடிப்பு, புண்கள் ஆகியவற்றை தவிர்க்கமுடியும். ஆன்டி-செப்டிக் பவுடர்களை பயன்படுத்துவது மிகுந்த பலனை அளிக்கும். ஆன்டி-செப்டிக் கிரீமின் மேல் இந்த பவுடரையும் பயன்படுத்தலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-