அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய்: வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் சினிமா துறையில் பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய லட்சக்கணக்கானோரில் வாய்ப்பு கிடைத்த மிக சொற்பமானோர் மட்டுமே நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். வாய்ப்பு கிடைக்காதா திறமை படைத்தோர் தங்களின் வாழ்வாதத்திற்காக பணிகளை மாற்றினாலும் பலர் தங்களின் முயற்சியை கைவிடாமல் இலக்கை போராடி கொண்டே இருப்பர். அவர்களில் ஒருவராக திகழ்கிறார் கார்த்திக் ஹர்ஷா. தற்போது துபாயில் பணியாற்றி வரும் இசை கலைஞரான இவர் சென்னையில் எப் எம் நிறுவனங்களில் சவுண்ட் இன் ஜினியராக பணியை துவங்கி பின்னர் படி படியாக விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு இசையமைத்து பின் தமிழ் திரையுலகில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
தேடி பிடி அடி திரைப்படம் மற்றும் போர் குற்றம் என்ற திரைப்படத்திற்கும் இசையமைத்து உள்ளார் போர் குற்றம் திரைப்படம் வெளியாகவில்லை. இவரின் குறும்படுகளுக்கான இசை அமைப்பில் 2 சர்வேதேச விருதுகளை பெற்றுள்ளார். இவர் இசையமைத்த முள்ளின் நிழலும் குதிற்று என்ற குறும்படம் லண்டன் திரைப்பட விழாவில் 3 விருது களை பெற்றுள்ளது. இசையமைப்பதோடு மட்டுமில்லாமல் சிறந்த பாடகரான இவர் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.தற்போது துபாயில் 89.4 எப் எம் என்ற பண்பலையில் சவுண்ட் இன் ஜினியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கூறியதாவது, நான் இசையமைத்துள்ள போர்குற்றம் பாடல்கள் அருமையாக வந்துள்ளது என்று பலரும் பாரட்டினர். படம் வெளிவந்தவுடன் நிச்சயம் என்னுடைய இசை பேசப்படும். இசையோடு எனது வாழ்வு அமைய வேண்டும் என்பதற்காக தற்போது துபாயில் இசைதுறையின் ஒரு பகுதியில் ஒலி அமைப்பில் பணியாற்றி வருகிறேன்.
தொடர்ந்து குறும்படங்கள்,தனி பாடல்கள் உள்ளிட்டவற்றுக்கு இசை அமைத்து வருகிறேன். என்னுடையை திறமைக்கு உரியவர்களும், மக்களும் நிச்சயம் அங்கீகாரம் தருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.தாய் நாட்டை விட்டு தூரத்தில் இருந்தாலும் என் எண்ணங்கள் தாயகத்தோடும் இசையோடும்தான் பயணிக்கிறது என்கிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-