அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

AIMMM – ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸ் ஈ முஷவரத் அமைப்பு சமீபத்தில் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது யோகி அதித்யாநாத் ஹிந்து யுவ வாகினி அமைப்பு இளம் முஸ்லிம் பெண்களை கடத்தி, கற்பழித்து அவர்களை இந்துக்களுக்கு கட்டாய திருமணம் நடத்தி வைக்கின்றது என்பது தான்.

உத்தர பிரதேசத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தை பார்வையிட்ட AIMMM இன் ஒரு உண்மை அறியும் குழு சமர்பித்த ஒரு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்களில் 12 வயது வரையிலான சிறுமிகளும் அடக்கம் என்பது வேதனையின் உச்சம். இந்த பகுதியில் பல பெண்கள் மாயமாகியுள்ளனர். சிலர் தங்களை கற்பழித்து கட்டாயமாக திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்ட இந்து கணவர்களுடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மேலும் சிலர் அவர்களிடம் இருந்து தப்பி தங்களின் குடும்பத்திற்கே மீண்டுள்ளனர் என்று அந்த குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் கூறுகையில், பல கிராமங்களில் இருந்து பல முஸ்லிம் பெண்கள் ஏமாற்றப்பட்டு கோரக்பூர் பகுதிக்கு கடத்தப்படுகின்றனர். பின்னர் அங்க அவர்கள் கற்பழிக்கப்பட்டு இந்து இளைஞர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இது போன்ற குற்ற செயலில் அதித்யாநாத்தின் ஹிந்து யுவ வாகினி அமைப்பும் ஆயுதம் தாங்கிய அதன் கூட்டணி அமைப்புகளும் செய்து வருகின்றன என்று AIMMM இன் உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது. இத்தகைய செயல்கள் 2013 இல் இருந்தே பெருமளவில் நடத்தப்படுவதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது. குஷிநகர் மாவட்டத்தில் பல இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு பல தகவல்களை திரட்டியது AIMMM இன் உண்மை அறியும் குழு.

இத்தோடு அல்லாமல் பல இடங்களில் பள்ளிவாளில் ஒலிக்கும் தொழுகைக்கான அழைப்பு ஹிந்துக்களுக்கு கேட்காத வண்ணம் பள்ளிவாசல்களை தொலைவில் வைக்கும்படி மிரட்டப்படுவதும், பள்ளிவாசல் நிலங்களை அபகரிப்பதும் அதற்கு ஆளும் அகிலேஷ் யாதவின் கட்சி எம்.எல்.ஏ களும் துணை நிற்பதும், கலவரங்களின் மூலம் பல முஸ்லிம் ககுடும்பங்கள் தங்கள் வீட்டை விட்டு விரட்டப்படுவதும் அவர்களின் வீடுகள் ஆக்கிரமிக்கப்படுவதும் நடந்து வருகின்றது என்று அந்த குழு தெரிவித்துள்ளது.

இந்த யோகி அதித்யாநாத் ஆதரவாளர்கள் ஏற்கனவே ஒரு பொதுக் கூட்டத்தில் இறந்த முஸ்லிம் பெண்களின் உடலையும் தோண்டி எடுத்து கற்பழியுங்கள் என்று கூறியது இங்கே குறிப்பிடத தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-