அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கடத்தல் செய்பவர்களை காசு வாங்கி கொண்டு அனுப்பும் இவர்கள்
பிழைப்புக்காக அயல் நாடு செல்பவர்களிடம் கொள்ளை அடிப்பதா?


சில நாட்களுக்கு முன் என் உறவினர் திருச்சியில் இருந்து துபாய்க்கு
(ஏற் இந்தியா எக்பிரஸ் விமானம் மூலம் ) சொன்றார்.
அனைத்து பரிசோதனைகள் முடிந்து செக் இன் க்கு காத்து இருந்த நேரத்தில் அந்த ஏர்போர்ட்டில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி ஒருவர் வந்து உங்களிடம் அதிகமா எடை உள்ளது என்று மிரட்டி நீ.. வா.. போ... என்று பேசி மிரட்டி யாரோ ஒரு அதிகாரியிடம் அழைத்து சென்று சார் இந்த அம்மா போர்டிங் பாசே கான்சல் பண்ணுங்க என்று சொல்லி ப்ளாக் மெயில் பண்ணி விமானம் கிளம்பும் நேரம் வரை தொல்லை கொடுத்து இருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த ஒரு சகோதரர் என் உறவினர்க்கு பரிந்து பேசி இருக்கிறார். அவரையும் பிடித்து வைத்து அதே தொல்லை கொடுத்து இருக்கிறார்கள். பணம் கேட்டு கொடுக்காமல் இவர்களை அனைவரின் முன்னால் ஒரு தேச துரோக குற்ற்றவாளி போல் உதாசீனம் பண்ணி ஒருமையில் பேசி இங்கிருந்து கொண்டுசென்ற சில பொருட்களையும் அந்த திருடர்களிடம் (அதிகாரிகள்தான் ) பறி விட்டு அவர்களை விமானம் கிளம்ப சில நிமிட இடைவேலையில் அவர்களை அனுப்பி இருக்கிறார்கள். அவரும் மிகுந்த வேதனையாகா கிளம்பி சென்று இருக்கிறார்.

இதில் ஏற் இந்தியா எக்பிரஸ் விமான அதிகாரிகள்தான் அதிகமா கொள்ளையர்கள் போல் செயல் படுகிறார்கள் என்பது முக்கிய செய்தி.

இப்போது. விமான நிலைய அதிகரிகளுக்கு என் கேள்வி

1) இமிகிரேசன் அதிகாரிக்கும் துப்புரவு தொழிலாளிக்கும் உள்ள பணி என்ன துப்புரவு தொழிலாளி எப்படி பயனாளியை பரிசோதனை செய்து பணம் பிடுங்கலாம் ?

2) இப்படி ஆல் பிடித்து வந்தால் எத்தனை அதிகரிக்கு கமிசன் கிடைக்கும்?

3) அப்படி என்றால் விமான நிலையத்தில் சட்ட விரோதமாக் பிடிபட்டு லாக்ரில் கிடக்கும் அந்த கடத்தல் தங்கம் இன்னும் தங்கமாக இருகிறதா இல்லை அதயும் கொள்ளை அடித்து விட்டார்களா?

பல திருட்டுத்தனம் போல் இவர்களின் திருட்டு தனம் விரைவில் அம்பலம் ஆகும் என்ற ஆதங்கத்தில்....

பின்குறிப்பு: இப்படி நீங்களும் பாதிக்க பட்டு இருந்தால் நீங்களும் பகிரலாம்.

தகவல்  : முஹம்மது பிலால்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-