அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய் ஜனவரி 11 (2016)
-------------------------------------------------------------------------
துபாயில் புத்தாண்டு கொண்டாட சில மணி நேரம் முன்பு துபாயில் மிக பிரபலமான ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். இந்த விபத்தில் 14 பேர் லேசான காயமடைந்தனர்.

இந்த கட்டிடம் தீ பற்றி எரிந்த போது, அமீரக வாழ் இரு வாலிபர்கள் அதன் பின்னணியில் செல்பி எடுத்துக் கொண்டு அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். ஹோட்டலில் பெரும் துயரம் நிகழ்ந்து வரும் நிலையில், எரிந்துக்கொண்டு இருக்கும் ஹோட்டலுக்கு முன்னால் நின்று சிரித்துக்கொண்டு ‘செல்பி’ புகைப்படம் எடுத்த வாலிபர்களின் செயல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளத்தில், ‘செல்பி’ மோகத்தால் இரக்கம் இல்லாமல் செயல்படும் சில நபர்களின் செயல் மிகுந்த கண்டனத்திற்கு உரியது’ என பலர் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் இந்த இரு வாலிபர்களையும் வழக்கு பதிவு செய்து துபாய் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வாலிபர்கள் இதற்கு முன்பு எவ்வித குற்றமோ அல்லது குற்ற பின்னணியோ இல்லாததை கருத்தில் கொண்டு அவர்களை கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தார்.


இதை போல ஒரு காதல் ஜோடியும் செல்பி செல்பி எடுத்துக் கொண்டு அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். பல நபர்கள் உயிருக்கு போராடி வரும் வேளையில், சிறிதும் கவலையின்றி செல்பி எடுத்துக்கொண்ட இந்த காதலர்களின் செயல் முட்டாள்தனமானது என பலர் விமர்சனம் விமர்சனம் செய்திருந்தனர்.

-------------------------------------------------------------------------

இங்கே நண்பர்கள் கவனத்திற்கு, அமீரக சட்டதிட்டத்தின் படி சமூக வலைத்தளத்தில் நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் விதமாகவோ, தனி நபர் தாக்குதலோ (சில பேர் 24 மணிநேரமும் இதையே பிழைப்பாக கொண்டுள்ளனர் என்பதுதான் மிகவும் வருத்தமான செய்தி), வீண் வதந்திகளை பரப்புதல், அடுத்தவர் சுதந்திரம் தலையிடல் போன்றவைகள் பெரும் குற்றமாகும். இவ்வித குற்றங்கள் நிருபிக்கபட்டால் குறைந்த பட்சம் 3 வருட சிறை தண்டனை மற்றும் Dhs 30,000/- அபராதமும் விதிக்கப்படும். அமீரக வாழ் நண்பர்கள் இதை கருத்தில் கொள்ளவும்.

-------------------------------------------------------------------------

நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!

நன்றி  :துபாய் தமிழ் நெட்வொர்க்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-