அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




நீலகிரி மாவட்டத்தில் உறைப்பனி பொழிவு நிலவி வரும் நிலையில், நேற்று ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ்க்கு சென்றது. நீலகிரியில் கடந்த அக்டோபா் மாத இறுதியில் இருந்து டிசம்பா் முதல் வாரம் வரை வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால் நவம்பா் மாதத்தில் துவங்க வேண்டிய பனி பொழிவு தாமதமாக கடந்த மாதம் தான் துவங்கியது. துவக்கத்தில் இருந்தே கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகாரித்து வருகிறது. இதனால் அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளி நிலவுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்.பி.எப்., போன்ற பகுதிகளில் உள்ள புல் மைதானங்களில் உறைபனி கொட்டி கிடந்தது.

கடும் உறைப்பனி பொழிவால் அதிகாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது உறைப்பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறி செடிகளும் கருகி வருகின்றன. வனப்பகுதிகளில் உள்ள செடி கொடிகளும் காய்ந்து வருகின்றன. நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியசும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. கடும் குளிா் காரணமாக தொழிலாளா்கள் ஊட்டி நகாரின் பல இடங்களிலும் தீ மூட்டி குளிகாய்ந்து வருவதையும் காண முடிந்தது. அப்பர்பவானி, அவலாஞ்சி மற்றும் கோரகுந்தா போன்ற பகுதிகளில் ஒரு டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழ் சென்றிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-