அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


  |

-முகமட் அதீர்-

கட்டாரில் வாழும் சகோதரர்களே சற்று எச்சரிக்கையாக இருக்கவும். இது கட்டாரில் நேற்று நான் வசிக்கும் பிரதேசத்தில் நடந்த சம்பவம்

நேற்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஒரு சகோதரர் எனது பகுதிக்கு வந்து
“ நான் காஸ்மீரில் இருந்து வருகிறேன். அங்கு பல அநாதைச் சிறுவர்கள் எமது கண்கானிப்பில் பாராமரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு உண்பதற்கு தங்குவதற்கு போதியளவு வசதியில்லையெனவும்
அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாரும் கூறி. ஓரிரு ஹதீஸ்களையும் கூறினார்“.

அவர் பார்ப்பதற்கு தோப் அனிந்து, தாடி வைத்து இருந்ததனால் அவரை உள்ளே அழைத்து குழந்தைகளைப் பற்றி விசாரிக்க அக் குழந்தைகளின் போட்டோ மற்றும் உறுது மொழியில் எழுதிய ஆவணம் ஒன்றையும் காட்டினார்

அதே வேலை எனக்கு அருகாமையில் இருக்கும் நன்பர் இது போல பல போலி அமைப்புக்கள் இயங்குகின்றதெனவும் இது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டுமென கூறி அவரது கையில் இருந்த உறுது மொழி அட்டையை வாங்கி அதிலுள்ள நம்பருக்கு call எடுக்க முயற்சிக்கும் பொழுது எங்கள் இருவரையும் தள்ளிவிட்டு காலில் போட்டுவந்த காலனியைக் கூட போடாமல் ஓடிவிட்டார்.

எனவே நன்பர்களே இது போல இஸ்லாத்தின் பெயரைக் கூறி உங்களிடத்தில் யாராவது உதவி செய்யுமாறு கோறி வந்தால் குறிப்பாக ( பாகிஸ்தான், காஸ்மீர் ) நபர்கள் வந்தால் சற்று உசாராக இருக்கவும்.
இதனை நண்பர்களுடன் பகிரவும். 
Madawala News


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-