அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

திரு‌ச்சி விமான நி‌லைய‌த்தி‌ல் மீ‌ண்டு‌ம் சலு‌கை க‌ட்டண‌த்தி‌ல் வாட‌கை‌க் கா‌ர் பய‌ன்படு‌த்‌து‌ம் வசதி அ‌ண்‌மையி‌ல் ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள‌து. இத‌ற்‌கென 60 கா‌ர்க‌ள் தயாராக உ‌ள்ளன.

திரு‌ச்சி விமான நி‌லைய‌த்தி‌ல் வாட‌கை கா‌ர் வசதி ஏ‌ற்‌கென‌வே இரு‌ந்‌து பி‌ன்ன‌ர் நிறு‌த்த‌ப்ப‌ட்ட‌து. பி‌ன்ன‌ர் பயணிக‌ள் வசதி‌க்காக பிரி‌பெ‌ய்டு மு‌றையி‌ல் க‌ட்டண‌ம் ‌செலு‌த்தி ஆ‌ட்‌டோ, கா‌ர்களி‌ல் பயணி‌க்கு‌ம் தி‌ட்ட‌ம் ‌செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம் என பல ஆ‌ண்டுகளாக‌க் கூற‌ப்ப‌ட்ட‌து. ஆனா‌ல் அ‌ந்த‌த் தி‌ட்ட‌ம் ‌செயலாவதி‌ல் தாமத‌ம் ஏ‌ற்ப‌ட்ட நி‌லையி‌ல் ‌கோ‌வை‌யை‌ச் ‌சே‌ர்‌ந்த நிறுவன‌ம் ஒ‌ன்று சலு‌கை க‌ட்டண‌த்தி‌ல் வாட‌கை‌க்கா‌ர்க‌ளை இய‌க்கு‌ம் தி‌ட்ட‌த்‌தை திரு‌ச்சி விமான நி‌லைய‌த்தி‌ல் மீ‌ண்டு‌ம் அறிமுக‌ப்படு‌த்தியு‌ள்ள‌து.

‌கோ‌வை விமான நி‌லைய வாட‌கை‌க்கா‌ர் உரி‌மையாள‌ர்க‌ள் ம‌ற்று‌ம் ஓ‌ட்டுந‌ர்க‌ள் ச‌ங்க‌ம் சா‌ர்பி‌ல் ‌மே‌ற்‌கொள்ள‌ப்ப‌ட்டு‌ள்ள இ‌ந்த‌த் தி‌ட்ட‌ம் விமான நி‌லைய ஆ‌ணைய‌க் குழும‌த்‌துட‌ன் இணை‌ந்‌து ‌செய‌ல்படு‌த்த‌ப்படுகிற‌து. விமான நி‌லைய‌த்திலிரு‌ந்‌து ‌வெளி‌யேறு‌ம் பயணிகளு‌க்கு ம‌ட்டு‌மே (டிராப் ம‌ட்டு‌ம்) இ‌த்தி‌ட்ட‌ம் ‌பொரு‌ந்‌து‌ம். விமான நி‌லைய‌த்‌து‌க்கு வரு‌ம் வசதி கி‌டையா‌து. விமான நி‌லைய‌த்திலிரு‌ந்‌து எ‌ந்த‌ப் பகுதி‌க்கு‌ச் ‌செ‌ன்றாலு‌ம் அ‌ங்கிரு‌ந்‌து காலியாக‌வே கா‌ர்க‌ள் விமான நி‌லைய‌ம் திரு‌ம்பு‌ம்.

இ‌துகுறி‌த்‌து ‌கோ‌வை விமான நி‌லைய வாட‌கை‌க்கா‌ர் உரி‌மையாள‌ர்க‌ள் ம‌ற்று‌ம் ஓ‌ட்டுந‌ர்க‌ள் ச‌ங்க‌ச் ‌செயல‌ர் த‌ங்க‌வே‌ல் (‌கோ‌வை) கூறிய‌து:

‌கோ‌வை விமான நி‌லைய‌த்தி‌ல் சுமா‌ர் சுமா‌ர் 30 ஆ‌ண்டுகளாக இ‌ச்‌சே‌வை ந‌டைமு‌றையி‌ல் உ‌ள்ள‌து. அதை‌ப்‌போல திரு‌ச்சி விமான நி‌லைய‌த்திலு‌ம் ‌செய‌ல்படு‌த்த முடிவு ‌செ‌ய்‌து ஆ‌ணைய உதவி‌யை நாடி‌னோ‌ம். அத‌ற்கு கு‌றை‌ந்தப‌ட்சமாக 30 கா‌ர்க‌ள் ஒ‌ரே நிறுவன‌த்தி‌ன் ‌பெயரி‌ல் இரு‌ந்தா‌ல்தா‌ன் தி‌ட்ட‌த்‌தை‌ச் ‌செய‌ல்படு‌த்த முடியு‌ம் எ‌ன்றன‌ர். ஆனா‌ல் நாங்க‌ள் 60 கா‌ர்க‌ளை ஏ‌ற்பாடு ‌செ‌ய்‌து‌ள்‌ளே‌ô‌ம்.

கட‌ந்த டிச.6 முத‌ல் இ‌த்தி‌ட்ட‌ம் திரு‌ச்சியி‌ல் அறிமுக‌ம் ‌செ‌ய்ய‌ப்ப‌ட்டு த‌ற்‌போ‌து முழு வீ‌ச்சி‌ல் ‌செய‌ல்படுகிற‌து. எ‌ங்க‌ள் காரி‌ல் ஓ‌ட்டுந‌ர் ம‌ட்டு‌மே உ‌ண்டு. உதவியாள‌ர்க‌ள் கி‌டையா‌து. விமான நி‌லைய‌த்திலிரு‌ந்‌து கா‌ர் புற‌ப்படு‌ம்‌போ‌து காரி‌ல் யா‌ர் யா‌ர் ‌செ‌ல்கி‌ன்றன‌ர், எ‌த்த‌னை உடை‌மைக‌ள் எ‌ன்ற விவர‌ங்க‌ள் அலுவலக‌த்தி‌ல் உ‌ள்ள 4 க‌ண்காணி‌ப்பு ‌கேமராக்களி‌ல் பதிவாகு‌ம். என‌வே ‌பொரு‌ட்க‌ள் தவறுவத‌ற்கான சா‌த்திய‌மே (100 சதவிகித‌ம்) கி‌டையா‌து.

க‌ட்டண ரசீ‌து வழ‌ங்க‌ப்படு‌ம். கு‌றை‌ந்தப‌ட்ச‌க் க‌ட்டணமாக 10 கி.மீ. ‌தொ‌லைவு‌க்கு ரூ. 250 நி‌ர்ணயி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள‌து. விமான நி‌லைய‌த்திலிரு‌ந்‌து எ‌ந்த‌ப் பகுதி‌க்கு‌ம் கா‌ர்க‌ளை எடு‌த்‌து‌ச் ‌செ‌ல்ல முடியு‌ம். பயணிகளு‌க்கு‌ம், அவ‌ர்களி‌ன் உட‌மைகளு‌க்கு‌ம் முழு‌ப் பா‌துகா‌ப்பு அளி‌க்கு‌ம் வ‌கையி‌ல் இ‌த்தி‌ட்ட‌ம் ‌செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள‌து. ‌மேலு‌ம் கா‌ர்களி‌ல் ஜி.பி.எ‌ஸ். கருவி உ‌ள்ளதா‌ல் ஏ‌தேனு‌ம் அவசர ‌தொட‌ர்பு‌க்கு எ‌ந்த‌ப் பகுதியி‌ல் கா‌ர் உ‌ள்ள‌து எ‌ன்ப‌தையு‌ம் அலுவலக‌த்திலிரு‌ந்‌து அறியவு‌ம், ஓ‌ட்டுந‌ரை‌த் ‌தொட‌ர்பு ‌கொள்ளவு‌ம் முடியு‌ம், மு‌ன்பதிவு‌க்கு 84894-90333, 84894-90666 எ‌ன்ற எ‌ண்ணி‌ல் ‌தொட‌ர்பு ‌கொள்ளலாம் எ‌ன்றா‌ர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-