அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்சில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் துபாயில் உள்ள பெருமாள் பூக்கடையில் கரும்பு ,இஞ்சி,மஞ்சள் கொத்து ,பனங்கிழங்கு காய்கறி வகைகள்,பூக்கள் என பல்வேறு பொருட்களும் விற்பனை செய்யபடுகிறது.யுஏஇல் பல்வேறு இடங்களில் இக்கடையின் கிளைகளிலும் பொங்கலுக்கான பொருட்கள் கிடைக்கு வகையில் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பெருமாள் பூக்கடை உரிமையாளார் கூறுகையில் :

வருடா வருடம் பண்டிகைகளுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்து தமிழர்கள் தாயகத்திலிருந்து கொண்டாடும் உணர்வை ஏற்படுத்தும் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகிறோம். தற்போது பொங்கலுக்கு தேவையானவை துபாயிலேயே கிடைப்பதால் யுஏஇ வாழ் தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆர்வத்துடன் பெற்று செல்கின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-