அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
'பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் நேற்று காலை விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் விபத்துக்கு உள்ளாகினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாயினர். மேலும் 3 நபர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த சம்பவத்தை ஒட்டி சிறுவாச்சூர் பொதுமக்கள் இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என சுமார் 3மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த சப்கலெக்டர் மதுசூதனன் ரெட்டி மற்றும் டிஎஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை செய்தனர்.
ஒவ்வொரு விபத்தின் போதும் இது போன்ற சாலை மறியல் நடப்பது வழக்கமாக உள்ளது. எனவே இவை தவிர்க்கபட இது குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறுவாச்சூர், ஆலத்தூர், பாடலூர் ஆகிய ஊர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து விலை மதிப்புமிக்க மனித உயிர்களை காத்திட வேண்டும் என முகநூல் பக்கத்தின் வாயிலாக கேட்டு கொள்கிறேன்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-