அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பொடுகு என்பது பூஞ்சை தொற்றினால் ஏற்படுவது. இது ஸ்கால்ப்பில் கடுமையான அரிப்பையும், வறட்சியையும் ஏற்படுத்தும்.

கற்றாழை பொடுகு பிரச்சனையை போக்குவதுடன் நிரந்தரமாக வராமல் செய்யும் வல்லமை கொண்டது. கற்றாழை ஜெல்லுக்கு பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் தன்மை உள்ளது.

எனவே அந்த கற்றாழை ஜெல்லை இரவில் படுக்கும் போது நேரடியாக ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி செய்து வந்தா பொடுகு நீங்கி, முடி உதிர்வதும் குறையும்.

வேப்ப எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை வெளியேற்றும்.

எனவே 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 9-10 துளிகள் வேப்ப எண்ணெயை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், விரைவில் பொடுகைப் போக்கலாம். எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் தன்மை, பொடுகை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து, ஸ்கால்ப்பின் pH அளவை சீராக வைத்துக் கொள்ளும்.

அத்தகைய எலுமிச்சையை கற்றாழையுடன் சேர்த்து ஹேர் மாஸ்க் போட்டால், பொடுகு விரைவில் போய்விடும்.

எனவே ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் போட்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-