அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

அபூசாலி முஹம்மத் சுல்பிகார்

நுளம்புகள் மூலம் பரவும் 'ஜிகா' என்ற புதிய வைரஸ், 25 நாடுகளை மிரட்டத் தொடங்கி உள்ளது. கரீபியன் மற்றும் அமெரிக்க நாடுகளை சமீப காலமாக மிரட்டி வருகிறது இந்த வைரஸ். 'ஜிகா' என பெயரிடப்பட்ட இந்த வைரசால் தாக்கப்பட்டால், கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு நரம்பியல் தொடர்பான கோளாறுகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.


உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) இதற்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கரீபியன் நாடுகளுக்கு செல்வோர் உஷாராக இருக்குமாறும் எச்சரித்துள்ளது.


மஞ்சள் காய்ச்சல்,டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்களை பரப்பும் 'குடும்பத்தை' சேர்ந்தது ஜிகா வைரசும். பொலிவியா, பிரேசில், கொலம்பியா, பராகுவே, அமெரிக்க வர்ஜின் தீவுகள், வெனிசூலா ஆகிய நாடுகளும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

அறிகுறிகள்: டெங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள் தான் இதற்கும். காய்ச்சல், தலைவலி, சிவந்த கண்கள் போன்றவை அறிகுறிகளாக இருக்கும்.


 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-