அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

http://www.thehindu.com/multimedia/dynamic/01287/THAVD_SAMPATH_1287837f.jpg
நாஞ்சில் சம்பத் பேட்டி எதிரொலி…பதவியிலிருந்து நீக்கம் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை
 ·

http://www.thanthitv.com/schedule/schedule.aspx?pgid=9&vidid=16930
 புதிய தலைமுறை  டிவிக்கு சமீபத்தில் நாஞ்சில் அளித்த பேட்டி இன்னும் முழுவதுமாக வெளிவராத நிலையில். அதன் முன்னோட்டம்   

புதிய தலைமுறை டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

இதில் நாஞ்சில் சம்பத்தின் பேட்டி அதிமுக அரசுக்கு பின்னடவை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது . இதன் தொடர்ச்சியாக இன்று அவர் அதிரடியாக கட்சியில் அவர் வகித்து வந்த கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து விடுவிப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதோ அதன் முன்னோட்டம்.

ஒரு வீட்டில் துக்கம் நடைபெற்றது என்பதற்காக மற்றொரு வீட்டில் கல்யாணத்தை நடத்தாமல் இருக்க முடியுமா, அதுபோலத்தான், வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதற்காக அதிமுக பொதுக்குழுவை ஆடம்பரம் இல்லாமல் நடத்த முடியாது என்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேட்டியளித்தார். தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார் நாஞ்சில் சம்பத்.

அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்புகையில், “வெள்ளத்தில் மக்கள் சிக்கி, இருக்கும் இடத்தையும் இழந்துவிட்டனர். பணக்காரர்கள் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டார்கள். ஸ்டார் ஹோட்டல்கள் கூட புத்தாண்டு பார்ட்டிகளை ரத்து செய்துவிட்டன. இந்த சூழ்நிலையில், மழை நின்று நாலு வாரத்திற்குள் நடந்த அதிமுக பொதுக்குழு பெரிய ஆடம்பரமாக நடந்துள்ளதே. டிஜிட்டல் பேனர்கள், பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு மட்டும் ரோடுகள் என போடப்பட்டுள்ளதே” என்றார்.

இதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத் கூறியது: மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியாச்சு. வெள்ள பாதிப்பு என்று ஒன்றும் கிடையாது. அதெல்லாம் 2015. இப்போது 2016 பிறந்தாகிவிட்டது. இன்னமும் வெள்ளம் பற்றி பேச வேண்டியதில்லை என்றார்.

அப்போது குறுக்கிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் “இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக எப்படி கூறுவீர்கள்? படுக்க கூட இடமில்லாமல் பலர் இன்னும் அவதிப்படுகிறார்கள். வீட்டில் இருந்த டிவி, சோபா என அனைத்து உடமைகளும் வெள்ளத்தோடு போயுள்ளதே, அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக கூறுவீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

அப்போது நாஞ்சில் சம்பத் பதிலளித்து பேசியது அதிர்ச்சியின் உச்சம். அவர் கூறியது: அதெல்லாம் மெதுவாதாங்க இயல்பு நிலைக்கு திரும்பும். ஊடகங்கள்தான் மக்கள் பரிதவிப்பு என்று சொல்லிக்கொண்டுள்ளது. குடிசையில் இருந்தவர்களுக்கு கூட இப்போது குடியிருப்பு வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

எனக்கே ஒரு வீடு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. ஒரு வீட்ல துக்கம் நடந்திருக்கு என்றால், மற்றொரு வீட்ல கல்யாணம் நடத்தாம இருக்க முடியுமா? அதுபோலத்தான், அதிமுக பொதுக்குழு ஆடம்பரமாக நடத்தப்பட்டதிலும் தப்பெல்லாம் கிடையாது, என்றார் நாஞ்சில் சம்பத் அசால்ட்டாக. “இதுவரை வெள்ள பாதிப்புக்கு உள்ளான ஒருவரை கூட முதல்வர் பார்க்கவில்லையே. மக்கள் கஷ்டம் அவருக்கு எப்படி தெரியும்?” என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டதற்கு, “வெள்ளம் பாதித்த இடத்தை பார்க்க முடியலைன்னா என்ன செய்ய முடியும்? வேறு அமைச்சர்கள் பார்க்கலியா.. பழைய காலம் போல கணக்கிடாதீங்க. இருக்கும் நிலையில் இருந்தே எல்லாவற்றையும் முதல்வர் கண்காணிக்க முடியும். 24 மணிநேரமும், உரியவர்களிடம் வேலை வாங்கிக்கொண்டுதான் இருந்தார்” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-