அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
"ஈரானில் சவூதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் இயற்றியுள்ளதன் மூலம், சவூதி அரேபியாவிடம் உலக முஸ்லிம்கள் நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி.) அடிபணிந்துவிட்டது என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.


இகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுசேன் ஜாபர் அன்சாரி கூறியதாவது,


டெஹ்ரானில் சவூதி அரேபியத் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டபோது, தூதரகத்தைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளைப் பற்றிய உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ளாமலே, ஈரானுக்கு எதிரான தீர்மானத்தை ஓ.ஐ.சி. இயற்றியுள்ளது. கூட்ட நிகழ்ச்சி நிரலில் இல்லாத அந்தத் தீர்மானத்தை இயற்றியிருப்பதன்மூலம், சவூதி அரேபியா எனும் ஒரே ஒரு நாட்டுக்காக சேவையாற்றும் அமைப்பாக ஓ.ஐ.சி. தன்னை மாற்றிக்கொண்டுள்ளது என்றார் அவர்.


முன்னதாக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஓ.ஐ.சி. கூட்டத்தில், டெஹ்ரான் மற்றும் மாஷத் நகரங்களிலுள்ள சவூதி அரேபியத் தூதரகங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்காக ஈரானைக் கண்டித்து தீர்மானம் இயற்றப்பட்டது.முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பில் 57 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-