அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அமெரிக்கா (06-01-16): பேப்பரை போல் சுருட்டி மடக்கி வைக்கும் டிவியை எல்ஜி நிறுவனம் விரைவில் அறிமுகபடுத்தவுள்ளது.


அமெரிக்க நாட்டின் வேகாஸ் நகரில் உலக நுகர்வோர் மின்னணு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த வர்த்தக கண்காட்சியில் எல்ஜி நிறுவனம் புதிய வகை டிவி ஒன்றை அறிமுகபடுத்தவுள்ளது. இந்த டிவி எல்ஈடி (LED) நுட்பத்தின் அடுத்த கட்டமான ஓஎல்ஈடி (OLED) டிஸ்பிளேயை கொண்டது. இதை பேப்பரை போல் சுருட்டி மடக்கி வைத்துக் கொள்ளலாம்.

மேலும், இது இரு பக்கமாக இருந்தும் பார்க்கும் வசதி கொண்டது எனவும், மிகவும் மெல்லியதாகவும், வசதி போல் மடக்கியும் வைத்து கொள்ளலாம் எனவும் எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு சாம்சங் நிறுவனம் இதே போல் மடித்து வைக்கும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-