அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




உத்தரபிரதேச மாநிலத்தில், மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, வாலிபர் ஒருவரை மொட்டையடித்து, கழுதையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.



உத்தரபிரதேச மாநிலம் ஜாலன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவ்தேஷ் சவிதா. இவர் அந்த பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. சங்கம் ஜாதவ் உட்பட மூன்று பேரை இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக பஜ்ரங் தள் அமைப்பினர் குற்றஞ்சாட்டி, சவிதா மீது தாக்குதல் நடத்தினர்.

பின்னர் ஆவ்தேஷ் சவிதாவை மொட்டையடித்ததோடு, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து, கழுதை மீது வைத்து அவரை இழுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-