
இஸ்லாமிய அழைப்பாளர் அருமை சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் 01.01.2016 நேற்று இரவு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் வி.களத்தூர்.இன் இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.

ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு.....!!
சகோதரர் செங்கிஸ்கான் அவர்களின் ஜனாஸா சென்னை ஆதம் மார்க்கெட்டிற்கு அருகில் உள்ள நவாப் பள்ளிவாசலின் பின்புறம் அமைந்திருக்கும் அவரது வீட்டில் உள்ளது.
இன்ஷா அல்லாஹ் நாளை அஸருக்கு பிறகு சரியாக 4:15க்கு அவரது உடல் சென்னை ராயப்பேட்டை கப்ரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.
அவரது இறுதி காலம் முழுவதும் இஸ்லாமிய பிரச்சாரத்தையே தனது முழு நேர பிரச்சாரமாக செய்து வந்தார்.
உங்களது தொழுகையில் அவருக்காக துஆ செய்யுங்கள்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.