அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய்: துபாய் டிடிஎஸ் ஈவெண்ட்ஸ் சார்பில் துபாயில் ஆண்டுதோறும் பொங்கல் விழா நடைபெறும் .இவ்வருடமும் துபாயில் இந்திய பள்ளி ஷேக் ராசித் அரங்கத்தில் நேற்று முன் தினம் பொங்கல் விழா நடைபெற்றது.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்.விழாவில் பங்கேற்றவர்களுக்கு ராயல் செப் சார்பில் பொன்னி அரிசி ,கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முக்கிய புரவலரான ஆலியா முகம்மது டிரேடிங் நிறுவனத்தின் (ராயல் செப் தஞ்சாவூர் பொன்னி அரிசி) மேலாண்மை இயக்குநர் ஷேக் தாவூத் தலைமை வகித்தார்.டிடிஎஸ் ஈவெண்ட் நிறுவனத்தின் தலைவி முனைவர் ஜெயந்தி மாலா சுரேஷ் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் பங்கேற்றார். சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது . மோகன சுந்தரம், விஜயசுந்தரி, மணிகண்டன், சுமதி, சண்முக வடிவேல்,ராமசந்திரன் உள்ளிட்ட பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வெஸ்டர்ன் ஆட்டோ நிறுவனத்தின் கீழக்கரை கமால், பவர் குரூப் நிறுவனத்தின் முஹம்மது ஹீசைன் உள்ளிட்ட புரவலர்களுக் பரிசு வழங்கப்பட்டது.

சர்வதேச அளவில் அதிகப்படியான வாசகர்களை கொண்டுள்ள முன்னணி பத்திரிக்கைகளில் ஒன்றான தினகரன் நாளிதழுக்கு விழா மேடையில் பரிசு வழங்கப்பட்டது. கவிதா பிரசன்னா மற்றும் சந்திரா கீதா கிருஸ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான விருது பெற்ற சமூக ஆர்வலர் குமார்,ரே ஜெ நாகப்பன் என்ற நாகா, எஸ் ஈவெண்ட் வெங்கட் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.புகைப்பட கலைஞர் இம்மானுவேல் புகைப்பட பணிகளை மேற்கொண்டார்.

விழா ஏற்பாடுகளை லியாக்கத் அலி ,தாஹா,பாலா,விஜயராகவன்,பிரசன்னா,கீதா கிருஸ்ணன்,சுந்தர்,விஜேயந்திரன்,உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். விழாமேடையில் பொங்கல் பானை வடிவில் கேக் செய்யப்பட்டு மேடையில் பொங்கல் கொண்டாடப்ப்பட்டது.விழாவில் பங்கேற்றவர்களுக்கு ராயல் செப் சார்பில் பொன்னி அரிசி ,கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-