அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

முஸ்லிம் ஆயுள்சிறைவாசிகளுக்கும் பாரபட்சமின்றி சட்டப்படி வழிக்காவல் இல்லாமல் பரோல் வழங்கக் கோருதல் தொடர்பாக மனு

கோவை மத்திய சிறையில் சுமார் முஸ்லிம் ஆயுள்தண்டனை சிறைவாசிகள் உள்ளனர் . இவர்களில் 1.ஆரூண் பாஷா .2.ஊம்பாபு 3.ரிஸ்வான் பாஷா 4.ஜப்ரு @ செய்யது ஜாபீர் அகமது . 5.யாசுதீன் 6. நெட்டை இப்ராஹீம் 7.அமானுல்லாஹ் 8.ஆஷிக் 9.அபுதாகிர் 10. ஷாஜஹான் 11.சிராஜ் 12.எஸ்.ஏ. பாஷா உள்ளிட்டவருக்கு நிலுவை வழக்குகள் எதுவும் இல்லை . இவர்கள் 1991 முதல் 2001 வரை நடந்த வெவ்வேறு கொலை வழக்குகளில் ஐபிசி 302 பிரிவின் கீழ் மட்டும் ஆயுள்தண்டனை பெற்றவர்கள் .
Tamilnadu Prison Manual vol 3 Rule 6 பிரிவின்படி ஆயுள்தண்டனை சிறைவாசிகளுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்படுகிறது . ஆயுள்தண்டனை வழங்கப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகள் கழித்த சிறைவாசிகளுக்கு வழிக்காவல் இன்றி பரோல் வழங்கப்படுகிறது .ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் சுமார் பத்தொன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தபோது கூட வெறும் 8 மணிநேரம் போலீசார் புடைசூழ பரோலில் அனுப்புகின்றனர் . இதனால் வழிக்காவல் இன்றி பரோல் வழங்கப்படுவதில்லை .
சிறை விதிகளின்படி மற்ற சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளும் சலுகைகளும் இவர்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டு இவர்கள் சட்டவிரோதமாக பாரபட்சமான முறையில் நடத்தப்படுகின்றனர் .

ஆகவே மரியாதைக்குரிய தாங்கள் நேரடியாக இதில் தலையிட்டு முஸ்லிம் ஆயுள்சிறைவாசிகள் பாரபட்சமற்ற முறையில் நடத்தப்படவும் குறிப்பாக ஐபிசி 302 பிரிவின்கீழ் தண்டனை பெற்ற ஆயுள் சிறைவாசிகளை சிறைவிதிகளின் படி உரிய நிபந்தனைகளின் பேரில் வழிக்காவல் இன்றி பரோலில் அனுப்பப்படவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
செய்தி : மீடியா 7

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-