அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜன 26. அன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குப்பட்ட வ.களத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

இக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சர்,அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சினை வ.களத்தூர; பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அங்கு, அவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இப்புகைப்படக் கண்காட்சியினை வ.களத்தூபு சுற்று வட்டப் பகுதிகளை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அ.பாரதி, மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-