அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பாதாம் பால் சிறுவயது குழந்தைகளுக்கு நல்லது.
குறிப்பாக உடல் எடையை குறைக்க உதவுவதால் அனைத்து வயதினரும் இதனை குடிக்கலாம்.
பாதாம் பாலில் உள்ள சத்துக்கள்
காப்பர், மென்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ ஈ மற்றும் பி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
பயன்கள்
பாதாமில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் மூளைத்திறனை அதிகரிக்கிறது.
ஒரு கப் பாதாம் பாலில் 60 கலோரிகள் உள்ளன, இதை பருகினால் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
இதில் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதால் இதய நோயாளிகள் இதனை குடிக்கலாம்.
காலை மற்றும் இரவில் பாதாம் பாலினை அருந்தினால் மூளையின் திறனை அதிகரிக்க செய்து ஞாபக சக்தியை வழங்குகிறது.
பாதாம் பாலில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின் போன்ற தசைகளை வலுவாக்கும் சத்துக்கள் இருக்கிறது.
இதில் உள்ள விட்டமின் ஈ, நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சீரான நிலையில் வைத்திருக்க உதவுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
சருமம் இளமையாகவும், முடிகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-