அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஆவாரம் பூ மருத்துவ இயல்பு மனித மரபணுக்களுடன் இணைந்து காலம் காலம்மாக நமக்கு பலனளிக்கும் தாவர வகைகளுள் ஒன்றும் இது பலருக்கு தெரியாது. சாதரணமான உதாரணம் அணுக்கதிர் தாக்கம் மரபணுக்களை தாக்கி பரம்பரை பரம்பரையாக நோயை உண்டாக்குகிறது, இந்த ஆவரம்பூ மரபணுக்களை தாக்கும் கதிரியக்கத்தை தகர்க்கும் பொருளாக இருக்கிறது, புற்று நோய் தாக்கும் செல்களை கட்டுப்படுத்தும் திறன் மற்றும் வெப்பமண்டல பிரதேசத்தில் சூரிய கதிரின் ஊடாக வீட்டில் புகும் ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்க சக்திகளை தடுத்து அவற்றை மீண்டும் வெளியே அனுப்பும் ஆற்றல் கொண்டது, இதன் மெல்லிய இலைகளின் மேல் சிலிக்கா படலமும் இந்த பூக்களின் நிறமியும் இந்த பணியை அற்புதமாக செய்ய இயற்கை நமக்கு தந்துள்ளது.

இதை பார்த்து விட்டு செல்பவர் பலர் கூறலாம் இது மிகைப்படுத்தப்பட்ட அல்லது ஓவர் டோஸ் கற்பனை என்று நினைக்கலாம்,

ஆவாரம் பூ இதழ் மையத்தில் வெள்ளை நிறம் இப்பூவின் சக்தி ஒருங்கிணைந்த அடையாளம், ஆனால் கனடாவில் காணப்படும் கேசியா அறிக்குலாட்டா வை விட நம்ம ஊர் ஆவாரம்பூ வீரியம் மிக்கது,

ஆவாரம் பூ கேன்சரை குணப்படுத்துமா அதற்கு என்ன ஆதாரம் என்றால் உலகில் பல நாடுகளில் உள்ள புற்று நோய் கழகத்தின் லோகோவில் உள்ள பூ இந்த கேசியா அரிக்குலடா என்ற ஆவாரம் பூ தான்( Canadian Cancer Society Logo) இந்த நாட்டு புற்று நோய் கழக லோகோவில் ஆவாரம் பூ இதழ் மையத்தில் வெள்ளை நிறம் இப்பூவின் சக்தி ஒருங்கிணைந்த அடையாளம், ஆனால் கனடாவில் காணப்படும் கேசியா அறிக்குலாட்டா வை விட நம்ம ஊர் ஆவாரம்பூ வீரியம் மிக்கது, இனியாவது வாசலின் மேலே பாட்டி சொருகி வைத்த ஆவரம்பூ கொத்தை காய்ந்த சருகு என வீசாதீர்கள்.” ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு ” ஆவாரை பொதுவாகவே ஒரு காய கற்ப மூலிகை.அதன் சிறப்புக்களையும் உபயோகிக்கும் முறைகளையும் காண்போம்.

ஆவாரம்பூ என்பது தங்கச்சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது சாதாரணமாக தங்க பற்பத்தின் விலையும் அதிகம் . தங்கத்தின் விலையும் அதிகம் . சரியாக முடியாத தங்க பற்பம் சிறுநீரகத்தைப் பாதிக்கும் . ஆனால் ஆவாரம்பூ என்பது இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பற்பம் . அதே சமயம் ஆவாரம்பூ மிக எளிதாக , விலையில்லாமல் அங்கங்கே பூத்துக் கிடக்கிறது .

ஒரு முறை மூலிகை ஆராய்ச்சி செய்ய கொல்லி மலைக்குச் சென்ற மாணவர்கள் அங்கே ஒரு சித்தரைக் கண்டார்கள் . அவர் உடல் ஒளி வீசும் பொன்னிறமாக இருந்தது . அவரிடம் அந்த மாணவர்கள் கேட்டார்கள் உங்கள் ஒளி வீசும் பொன்னிற உடலுக்கு காரணம் என்ன என்று கேட்டார்கள் . அதற்கு அவர் சொன்னார் ” ஆவாரம்பூ என்ற இந்த பொன் மூலிகைதான் எனது இந்த பொன்னிற ஒளி வீசும் உடலுக்கு காரணம் “என்றார் . “ஆவாரம்பூ காலையில் ஒரு கைப்பிடி , மாலையில் ஒரு கைப்பிடி பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறேன் ” என்றார் . “அதன் விளைவாக ஆவாரம்பூவில் உள்ள தங்கச் சத்து எமது உடலில் ஊறி உடல் இப்படி மாறியது ” என்றார் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த மூலிகை இந்த ஆவாரம்பூ .

ஆவாரம் பூவுடன் ஊற வைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால், நமைச்சல், துர்நாற்றம் நீங்கும். உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள், ஆவாரம் பூ கசாயத்தை தவறாமல் குடித்து வந்தால், உடல் குளுமை அடையும். ஆவாரம் பூவை ஊறவைத்து, குடிநீர் தயாரித்து அருந்தினால் நாவறட்சி நீங்கும். கண் எரிச்சல் நீங்கும். உடல் சூட்டினால் கண் சிவந்து விடும். அவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடித்து, நீர் விட்டு அரைத்து குழப்பி, படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட்டால் சிவப்பு நிறம் மாறும்.

காலை, மாலை, அரை தேக்கரண்டி பசு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.

20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்

. “நீரிழிவு”க்கு பயன்படும் ஆவாரம் பூ

நோய்க்கு ஆவாரம் பூ ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுனு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு சூப்பர் மருந்து.
ஆவாரம்பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து, அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். ஆவாரம் பூக்களை சேகரித்து, பாசிப்
பருப்புடன் சேர்த்து, சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும்.

. ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும். அப்புறம்… ஆவாரம் பூவோட கருப்பட்டி சேத்து மணப்பாகு செஞ்சு குடிச்சா ஆண்குறி எரிச்சல், சொப்பனஸ்கலிதம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகம் குணமாகும். ஆவாரையின் இலை, பட்டை, பூ, வேர், பிசின் இப்படி எல்லாத்திலயும் மருத்துவ குணம் இருக்கு.”

ஆவாரம்பூ குடிநீர்

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.
இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-