அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தி சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் சவுதி அரேபியா அண்மையில் மரண தண்டனையை நிறைவேற்றியது.


ஷியா பிரிவினரை பெரும்பான்மையாக கொண்ட ஈரான், ஈராக் நாடுகள் சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளன. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் உருவாகியுள்ளது.


இந்நிலையில், பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ள சவூதி அரேபியா அந்நாட்டிடம் இருந்து அணு ஆயுதங்களை வாங்க வாய்ப்புள்ளதாகவும், அப்படி வாங்கினால் நிலமை மேலும் மோசமாகிவிடும் எனவும் அமெரிக்காவின் மூத்த செனட்டர் ரான் ஜான்சன் கவலை தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-