அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி்.களத்தூரில் இதுவரை ஆன்லைன் வசதியுடன் IOB பேங்க் மட்டுமே இயங்கி வருகிறது நமதூர் மக்களுக்கு போதுமான சேவை கிடைக்க பெருவதில் கடும் நெருக்கடியை சந்தித்த நமதூர் வர்த்தக நிறுவனங்களும் NRI அக்கௌண்ட் வைத்துள்ள வாடிக்கையார்களும் பொது மக்களும் பல காலமாக மற்றொறு பேங்க் கொண்டுவர பல ஏற்பாடுகளும் செய்தார்கள் ஆனாலும் கிடைக்க பெறவில்லை
சில ஆண்டுகளாக நமதூர் வியாபாரிகள் சங்கம்
மாவட்ட வியாபாரிகள் சங்க ஒத்துளைப்புடன் மாவட்டகலெக்டர் தரேஸ்அஹமது அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாவட்டவியாபாரிகள் சங்க குறைதீர்ப்பு கூட்டத்தில் மணு அளித்து பல முறை வழியுறித்தி பேங்க் மேலாளர்களுடன் கலந்தாய்வு நடத்தி மாவட்ட கலெக்டர் அவர்களின் பெரும் முயற்ச்சிக்கு பிறகு தற்போது IOB பேங்க் நோஅப்ஜக்‌ஷன் லெட்டர் மாவட்ட நிர்வகத்திற்கு வழங்கியுள்ளது அதை (30-12-15) அன்று நடைபெற்ற மாவட்ட வியாபாரிகள் சங்க குறைதீர்ப்பு கூட்டத்தில் அனைத்து பேங்க் மேலாளர்கள் முன்னிலையில் மற்றபேங்க் வர எந்த வித மறுப்பும் இல்லை என்ற IOB வழங்கிய ஆவணத்தை நமது வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் DRO மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளரும் வழங்கினார்கள் ஆவணம் கீழே இணைக்கபட்டுள்ளது
குறிப்பு : (இந்த ஆவணம் கிடைக்கத்தான் பல ஆண்டு காலம் பலபேர் போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது)
(20-01-16) தேதிக்கு பிறகு மண்டல மேலளர்களை நேரில் சந்தித்து மற்ற ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக வி்.களத்தூர் வியாபாரிகள் சங்க தலைவர் ஹயாத்பாஷா அவர்கள் தெரிவித்தார்கள்
மேலும் (30-01-15) அன்று நடைபெற்ற கூட்டத்தில் வி.களத்தூர் கடைவிதியில் தேங்கி நிற்க்கும் கழிவுகளை உடனே வெளியேற்றவும்
வி்.களத்தூர்க்கு பஸ் வசதிகளை அதிகப்படுத்தி தரவும் கோரிக்கை மணு அளிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-