அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வாஷிங்டன்: ‘‘உலகம் முழுவதிலும் உள்ள சிறுபான்மை மதத்தினரை அமெரிக்கா பாதுகாக்கும்’’ என உலக மத சுதந்திர தின நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா உரையாற்றினார். உலக மத சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா ஆற்றிய உரையில் கூறியதாவது: மத சுதந்திரத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதனை அமெரிக்காவின் சுய செயல்பாடு என கூறமுடியாது. தலைமுறைகள் கடந்து, மத சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் எனும் கொள்கை அர்ப்பணிப்பு எல்லோருக்கும் இருக்க வேண்டும். இது கடினமானதுதான். வழிபாட்டுத் தலங்கள், குழந்தைகள், மனிதர்கள் என மத நம்பிக்கை கொண்ட பல தரப்புகளுக்கும் அச்சுறுத்தல், வன்முறை என சமீப காலமாக பாதிப்பு ஏற்பட்டு வரும் இவ்வேளையில், மதச்சுதந்திரத்தை பாதுகாக்கும் கடமையை நிறுவேற்றுவது கடினமானது.

உலகளவில் எல்லா தரப்பினரும் மத சுதந்திரத்தை அனுபவவிக்க வேண்டும் எனும் குறிக்கோளுடன் எனது நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுபவர்கள், துன்புறுத்துபவர்களுக்கு எதிராக பல தரப்புகளின் விரிவான ஒத்துழைப்புடன் நாங்கள் செயலாற்றி வருகிறோம். பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வது பற்றி சிறுபான்மை மதங்களின் தலைவர்கள், மக்கள் தலைவர்கள் ஆகியோருக்கு ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். இதே முயற்சியை கடைபிடித்து, மத சுதந்திரம் உலகளாவிய அளவில் நிலைத்து நீடிக்க உலக நாடுகளும் முன்வர வேண்டும். அச்சுறுத்தல் இன்றி தங்களுக்கு பிடித்த மத நம்பிக்கையுடன் வாழ் எல்லா குடிமகன்களுக்கும் அடிப்படை உரிமை உள்ளது.

மதவெறி காரணமாக கொலையில் ஈடுபடுபவர்கள், சிறுபான்மையினருக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி, ஆதாயம் அளிக்க மறுப்பவர்கள் ஆகியோர் இனி ஓரங்கட்டப்பட வேண்டும். எந்த தாக்குதலையும் குறிப்பிட்ட மதத்தின் மீதான தாக்குதலாக பேதம் கருதாமல், எல்லா மதங்களின் மீதான தாக்குதலாக கருதி, எல்லோருக்கு மத சுதந்திரம் கிடைக்க ஒரே தேசம் என்ற குடையின் கீழ் எல்லோரும் அணி திரள வேண்டும். இவ்வாறு ஒபாமா உரையாற்றினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-