அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஸூரா அன் நம்ல் இன் 20 ஆம் வசனத்தில் அள்ளாஹுத் தஆலா கூறியுள்ள "ஹுத்ஹுத்" பறவை என்ன என்பது எம்மில் பலருக்கு தெறியாது. ஆம் அறிய வகை பறவை இனமான "ஹுத்ஹுத்" ஆங்கிலத்தில் Hoopoe என்று அழைக்கப் படுவதுடன் அழகிய, பல சிறப்பம்சங்களை கொண்ட பறவையாகும். குர்ஆனிற்கு விரிவுரை வழங்கும் முபஸ்ஸிரீன்களில் பலர் "ஹுத்ஹுத்" பறவையின் மிக சிறப்பான பண்பாக "பூமியின் எந்த இடத்தில் நீர்வளம் இருக்கின்றது என்பதை - அது எவ்வளவு ஆழத்தில் இருந்த போதும் - சரியாக கணிக்கும் ஆற்றல் கொண்ட பறவை என வர்ணித்துள்ளதுடன் ஹழ்ரத் ஸுலைமான் ( அலை ) அவர்கள் தனது ஆட்சியின் போது "ஹுத்ஹுத்" பறவையை கொண்டே நீர்வளமுள்ள இடங்களை அடையாளம் கண்டு கொண்டார்கள் எனவும் குறிப்பெழுதியுள்ளார்கள்.


குர்ஆனில் அள்ளாஹுத் தஆலா கூறும் போது :


وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ - لَأُعَذِّبَنَّهُ عَذَاباً شَدِيداً أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُّبِينٍ
( ஸுலைமான் நபியாகிய ) அவர் பறவைகளை (ப் பற்றியும்) பரிசீலனை செய்து "நான் (இங்கே) ஹுத்ஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?”
“நான் நிச்சயமாக (ஹுத்ஹுத் ஆகிய) அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன். அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன். அல்லது (இங்கே வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார் என அள்ளாஹ் கூறுவதுடன் இதன் தொடர் ஆயத்துக்களில் .....


"சிறிது நேரத்தில் "ஹுத்ஹுத்" பறவை அவ்விடம் வந்து ஸபா என்ற ஓர் இடத்தில் ( பல்கீஸ் ) என்ற ஒரு ராணி ஆட்சி புரிந்து கொண்டிருப்பதாகவும் ராணியும் அவளது சமூகத்தாரும் அள்ளாஹ்வை விடுத்து சூரியனை வணங்கிக் கொண்டிருப்பதாகவும் இன்னும் சில முக்கிய தகவல்களையும் நபி ஸுலைமான் ( அலை) அவர்களுக்கு வழங்கியதாகவும் அள்ளாஹ் குறிப்பிடுகின்றான்.


(அது மிகவும் சுவாரஸ்யமான அழகிய ஒரு சம்பவம் - 19 ஆம் ஜுஸுவில் உள்ள ஸூரா அன் நம்ல் ஆயத் இலக்கம் 20 - 44 ) இல் முழு சம்பவத்தையும் பார்க்கலாம்.


ஆம் அள்ளாஹ்வின் அற்புத படைப்பாகிய "ஹுத்ஹுத்" பறவை எப்படியான தோற்றமுடையது என்று கீழே கொடுக்கப் பட்டுள்ள Link மூலம் அறிந்து கொள்வோம். (வீடியோ) 

(அஷ் ஷெய்க் ஷபீக் ) 


 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-