அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மதீனாவில் இருக்கும் இறைத்தூதரின் அடக்கஸ்தலத்தை இலகுவாக பெண்கள் அணுக முடியுமான வகையில் அந்த பகுதியை விரிவுபடுத்த பொறியியலாளர்கள் மற்றும் கட்டடக்கலை நிபுணர்கள் கொண்ட குழுவொன்று அங்கு ஆய்வுகளை நடத்தியுள்ளது.


சவூதியின் ஷூரா கவுன்ஸிலில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் இறைத்தூதரின் அடக்கஸ்தலத்தை அணுக பெண்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்படவில்லை என்று முறையிட்டிருக்கும் நிலையிலேயே அங்கு விரிவுபடுத்தும் வேலைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.


ரவ்தாஹ் அல் ஜென்னாஹ் என்று அழைக்கப்படும் இறைத்தூதரின் அடக்கஸ்தலம் அமைந்திருக்கும் தலத்தில் பெண்கள் அமைதியாக தொழுவதற்கு சூழல் இல்லை என்றும் ஒதுக்கப்பட்டிருக்கும் நேரமும் போதுமாக இல்லை என்றும் ஷூரா கவுன்ஸில் உறுப்பினர் பாதிமா அல் குரானி என்ற பெண் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அவதானிக்க நிபுணர்கள் கொண்ட குழுவொன்று மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலை பார்வையிட்டதாக இரு புனித பள்ளிவாசல்களுக்குமான பொறுப்பாளர் திட்டத்தின் தலைமை பொறியியலாளர் அப்துல் ஹக் அல் ஒக்பி குறிப்பிட்டார்.


“ஆண்டு முழுவதும் பெண்கள் அணுக முடியுமான வகையில் ரவ்தாஹ்வை சூழ போதிய இடவசதியை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். இதில் அவர்களது பாதுகாப்பு கவனத்தில் கொல்லப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் தகவலுக்கு 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-