அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தாமாக துண்டிக்கப்படும் தொலைபேசி இணைப்புக்களுக்கு ஒவ்வொரு முறை துண்டிப்புக்கும் ஒருரூபாய் இழப்பீடு வழங்கப்படும் நடைமுறை இன்று முதல்
அமலுக்கு வந்துள்ளது.

பேசிக்கொண்டு இருக்கும்போதே தொலைபேசி அழைப்புக்கள் தாமாக துண்டிக்கப்பட்டு வருகின்றன என்று தொலைத் தொடர்பு ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தொலைத் தொடர்பு ஆணையம் துண்டிக்கப்படும் அழைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவுப்

பிறப்பித்தது. ஆனால், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.இந்த வழக்கு இந்த மாதம் 6ம் திகதி விசாரணைக்கு வரும்

நிலையில், அதுவரை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்ககூடாது என்று நீதிமன்றம் தொலைத் தொடர்பு ஆணையத்திடம் கோரிக்கை
வைத்த நிலையில், நிறுவனங்கள் தாங்களாக முன்வந்து இன்று முதல் தாமாக துண்டிக்கப்படும் இணைப்புக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒருரூபாய் இழப்பீடு வழங்க
முடிவு செய்துள்ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-