அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பாலிவுட் நடிகர்களான ஷாருக் கான் மற்றும் அமீர் கான் அரசியல் கருத்துக்களை தெரிவிக்கும்போது எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரான உமாபாரதி எச்சரித்துள்ளார்.
ஷாருக் கான் மற்றும் அமீர்கான் சமீபத்தில் இந்தியாவில் நிலவி வரும் சகிப்பின்மை குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இது பற்றி உமா பாரதி கருத்து தெரிவிக்கையில் “அமீர் கான், சாருக் கான் மற்றும் சில நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு நடிகர் நடிகராகவே இருக்க விரும்பினால் அனைவரும் அவர்களை விரும்புவார்கள். ஆனால் எப்பொழுது நீங்கள் அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவிகின்றீர்களோ அப்பொழுது அதற்கான எதிர்வினையையும் சந்திக்க தயாராக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் “உங்களுக்கு எப்படி கருத்து சுதந்திரம் இருக்கின்றதோ அதே போன்று மறுதரப்பினருக்கு உங்கள் கருத்துக்கு எதிர்வினையாற்றவும் உரிமை இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.
இத்தகைய நடிகர்களின் கருத்துக்கள் இந்தியாவின் பெயருக்கு களங்கம் விளைவித்துவிட்டது என்று கூறிய அவர் இவர்கள் நடிப்பதோடு தங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் ஏஞ்சலீனா ஜூலி போன்று சமூக சேவைகளில் ஈடுபடட்டும் என்று கூறியுள்ளார்.

முன்னணி நடிகர்களாகவும் இருக்கவேண்டும் அனைவராலும் விரும்பப்படவும் வேண்டும் கருத்து சுதந்திரமும் வேண்டும் என்றால் இந்த மூன்றும் ஒரு சேர கிடைக்காது என்று கூறியுள்ளார்.

அவரிடம் பா.ஜ.க வின் அமைச்சர்கள் நிரஞ்சன் ஜோதி, எம்.பி.சாக்சி மகாராஜ் போன்றோரின் கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பியபொழுது அதற்கு பதில் கூற மறுத்துவிட்டார். இந்தியாவில் நிலவி வரும் சகிப்பின்மை குறித்து சமீபத்தில் இயக்குனர் கரன் ஜோகரும் கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-