அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பொங்கல் பண்டிகை என்பது சூரியனை வணங்குபவர்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும்.ஆனால் “தமிழா் திருநாள்“ என்று கூறி தமிழ் பேசும் அனைவரும் இதை கொண்டாட வேண்டும் அது தான் நல்லிணக்கத்தின் அடையாளம் என்று சிலர் கூறி முஸ்லிம்களையும் சூரியனை வணங்க சொல்கின்றனர்.


கல், மண், மரம், விலங்குகள் அனைத்தையும் வணங்கியவர்கள், அது தவறு இவற்றுக்கு எந்த சக்தியுமில்லை, படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும் என உணரந்து ஏக இறைவனை வணங்குவதற்காகவே அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தனா். அந்த முஸ்லிம்களை மீண்டும் சூரியனை வணங்க சொன்னால் எப்படி?

கடவுளே இல்லை என்று சொல்லும் பகுத்தறிவுவாதிகளும் இதை கொண்டாடுவது அதிலும் வேடிக்கை.

தமிழகத்தில் வாழ்ந்து தமிழ் பேசும் ஒரு முஸ்லிம் வாலிபன் ஒரு இந்து பெண்ணை மணமுடிக்க எண்ணி பெண் கேட்டு வந்தால் தமிழன் தானே என்று பெண் கொடுத்துவிடப் போவதில்லை. அங்கே மதம் வேறு, ஜாதி வேறு, வணங்கும் தெய்வங்கள் வேறு என்று அனைத்திலும் வேறுபடுகிறோமல்லவா?

அதுபோலவே பண்டிகைகளும் வேறுபடும். மதம் சாராத விளையாட்டுக்கள், விழாக்கள் அனைத்திலும் ஒன்றுபட்டுத்தானே நிற்கின்றோம்.

ஒரு மதத்தின் தெய்வத்தை இன்னொரு மதத்தவன் வழிபடுவதல்ல நல்லிணக்கம்!

ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் பசியால் தவிக்கிறான் என்றால் அவனுக்கு உணவளிக்கக் கூடிய

ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் நோயால் அவதிப்படுகிறான் என்றால் அவனது மருத்துவத்திற்காக உதவுவதும்

ஒரு இந்து மதத்தை சார்ந்தவனின் உயிர்காக்க இரத்தம் தேவைப்படும் பொழுது இரத்தம் கொடுப்பவனும் ஒரு முஸ்லிம் என்றால் அவன் தான் நல்லிணக்கத்தை பேணுகிறான்.

இதைத்தான் இன்று தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் செய்து வருகின்றான்.

வாழ்க நல்லிணக்கம்!!
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-