அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
கோவை: மலிவுவிலையில் நாப்கின் தயாரித்து அதை அனைத்து பெண்களும் பயன்படுத்த உழைப்பதே தனது லட்சியம் என்று பத்மஸ்ரீ விருதுபெற்ற முருகானந்தம் பெருமிதத்துடன் கூறினார். கோவை பாப்பநாயக்கன்பாளையம் புதூரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர், பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிடரி நாப்கினை மலிவு விலையில் தயாரித்ததுடன் இம்முறையை கிராம பெண்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து முருகானந்தம் கூறியதாவது: மலிவு விைலயில் சானிடரி நாப்கினை தயாரித்தபோது அதன் தரத்தை அறிய பெண்களுக்கு வழங்கினேன். ஆனால், பெண்கள் இந்த முயற்சியை தவறான செயலாக கருதி ஒத்துழைக்கவில்லை. என் நண்பர்கள் வட்டாரத்தினரே வெறுத்து விலகினர்.
ஆனால், மனம் தளராமல் தீவிரமாக முயன்று குறைவான விலையில் தரமான நாப்கின் தயாரிக்கும் மெஷின் கண்டுபிடித்தேன். இந்த நாப்கினை குறைந்த விலைக்கு வாங்கிய பெண்கள் வியந்தனர். தற்போது, எனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இது கூடுதல் பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஏழைகளுக்கு மேலும் உழைப்பேன். சுகாதாரமான இந்தியாவை உருவாக்கத் தான் விலை குறைவான நாப்கின் தயாரிப்பு முயற்சியில் வெற்றி பெற்றேன்.
அனைத்து கிராம பெண்களும் இதனை பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்துவதே என் லட்சியம். இவ்வாறு முருகானந்தம் கூறினார். முருகானந்தத்துக்கு, ‘சமூக மாற்றத்துக்கான சிறந்த கண்டுபிடிப்பு விருதை’ 2005ல் ஐஐடி வழங்கியது. 2009ல் ஜனாதிபதி விருது பெற்றார். 2012ல் செல்வாக்கு மிக்க 100 பேரில் ஒருவராக ‘டைம்ஸ் ஆப் நியூயார்க்’ நாளிதழ் இவரை தேர்ந்தெடுத்தது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-