அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சர்வதேச அளவில் உள்ள மக்களின் சொத்துக்களின் பாதியளவு, 62 பேரிடம மட்டுமே உள்ளதாகவும், செல்வந்தர்கள் மென்மேலும் செல்வந்தர்கள் ஆகின்றனர் எனவும், ஏழைகள், மேலும் ஏழைகளாகவே உள்ளதாகவும் சர்வதேச தொண்டு நிறுவனமான ஆக்ஸ்போம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள பில்லியனர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஆக்ஸ்போம் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. சுவிட்சர்லாந்தின் டேவோஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில், ஆக்ஸ்போம் நிறுவனம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவி்த்துள்ளதாவது, 2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சர்வதேச அளவில் உள்ள 62 பில்லியனர்களின் சொத்துமதிப்பு 44 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதே காலகட்டத்தில், ஏழைகளின் சொத்துமதிப்பு 41 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த 62 பில்லியனர்களில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் 17 பேரும், ஏனையவர்கள் சீனா, பிரேசில், மெக்ஸிகோ, ஜப்பான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை 
நண்பர்களுடன் பகிரவும். 
மடவல நியூஸ் .
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-