அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் அருகே, செவ்வாய்க்கிழமை அதிகாலை கிரேன் மீது ஆம்னி பேருந்து மோதியதில், பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

தென்காசியில் இருந்து திருச்சி வழியாக சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் சென்றபோது, எதிரே வந்த கிரேன் மீது ஆம்னி பேருந்து மோதியது. தொடர்ந்து, சிமென்ட் மூட்டை ஏற்றிச் சென்ற லாரி, மற்றொரு மினி லாரி ஆகிய வாகனங்கள் மீதும் அந்த ஆம்னி பேருந்து மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆம்னி பேருந்து ஓட்டுநரான திருச்சியைச் சேர்ந்த குருசேவ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த தென்காசியைச் சேர்ந்த தங்கவேல் (23), பெருமாள் (38), சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பாண்டியன் (52), துறையூர் அருகேயுள்ள செல்லியம்பாளையத்தைச் சேர்ந்த மோகன் (55), பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரேன் ஓட்டுநர் புகழேந்தி (29), திண்டிவனம் அருகேயுள்ள மயிலத்தைச் சேர்ந்த உதவியாளர் பிரவீன்குமார் (19) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-