அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அபுதாபி,


அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் மன்னார் அப்பாஸ். இவர் இந்திய உளவுத்துறைக்கு ரகசிய உளவாளியாக செயல்பட்டதாக கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்களை அபுதாபியில் உள்ள இந்த தூதரகத்துக்கு வழங்கியதாக அப்பாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு அபுதாபியின் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிபதி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகம் உடனடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

அப்பாசின் தண்டனை காலம் முடிந்த பிறகு, அவர் அங்கிருந்து நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-