அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

புதுடெல்லி,

நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதிதான், அரசு ஊழியர்களில் அதிக சம்பளம் வாங்குவதாக பொதுவான கருத்து நிலவி வருகிறது. ஆனால், மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்களில் 370 பேர் மாத சம்பளமாக ரூ.4½ லட்சம் பெற்று வரும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

பா.ஜனதா மூத்த தலைவர் சாந்தகுமார் தலைமையிலான உயர்மட்ட குழு, இத்தகவலை வெளியிட்டது. மேலும், தொழிலாளர்கள், தங்களது வேலையை வெளியாட்களை கொண்டு நிறைவேற்றி, முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளது. இதுபற்றிய பத்திரிகை செய்தி அடிப்படையில், மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளை, தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டு, மத்திய அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதை எதிர்த்து, இந்திய உணவு கழக தொழிலாளர்கள் சங்கம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

அம்மனு, தலைமை நீதிபதி தாக்கூர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பாத நீதிபதிகள், தொழிலாளர்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தனர். உணவு கழகத்தில், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அளவுக்கு பல்வேறு ஊக்கத்தொகை பெறும் திட்டங்கள் இருப்பதாக உணவு கழக வக்கீல் கூறியதையும் நீதிபதிகள் ஏற்கவில்லை.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:–

உணவு கழகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன. ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி எப்படி ரூ.4½ லட்சம் சம்பாதிக்கிறார்? அவர் தொழிலாளியா? காண்டிராக்டரா? இது ஜனாதிபதியின் சம்பளத்தை விட அதிகம். 370 தொழிலாளர்கள் இந்த சம்பளத்தை பெற்று வருவதால், ஆண்டுதோறும் ரூ.1,800 கோடி இழப்பு ஏற்படுகிறது.

ஏதோ கடுமையான தவறு நடந்து கொண்டிருக்கிறது. எனவே, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாங்களே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து ஊழலுக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்போம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-