அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக முஸ்லிம்களின் புனித பூமியுமான மக்காவில் (22.01.2016) ஜும்ஆ உரையாற்றிய தலைமை இமாம் ஷேக் சாலிஹ் பின் ஹுமைத் அவர்கள்.

அல்லாஹ் நமக்கு அளவுக்கு அதிகமான ரஹமத்துக்களை வாரி வழங்குகிறான். அதனை அளவுக்கு அதிகமான வீண் விரயம் செய்கிறீர்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள், அவ்வாறு வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள் என்கிறான்.

மக்காவில் வீடுகளிலும், திருமணங்களிலும் இன்னபிற நிகழ்ச்சிகளிலும் வீண் விரயம் செய்யப்படும் உணவுகளை 18 ஏழை நாடுகளிலுள்ள 17 சதவீத ஏழை குழந்தைகளின் பசியை போக்க முடியும்.

மக்கா மாநகரில் வீண் விரயம் செய்யப்படும் உணவுகளால் சுமார் 48 லட்சம் மக்களின் பசியை போக்க முடியும்.

வீண் விரயம் செய்யாதீர்கள். அல்லாஹ்வுடைய ரஹமத்தை வீண் விரயம் செய்யாதீர்கள் என்று கண்டிப்போடு கூறினார்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-