அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...புதுடெல்லி, ஜன. 13-

விமானம் கிளம்புவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பாகவே பயணிகள் விமான நிலையத்திற்கு வந்துவிடவேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த பதான்கோட் தாக்குதலுக்கு பிறகு நாடு முழுவதும் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகளும் கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

எனவே ஏர் இந்தியா பயணிகள் 3 மணிநேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வந்துவிடவேண்டும். அதன் மூலம் விமானங்கள் கிளம்புவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க முடியும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

தற்போது உள்நாட்டு பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும், சர்வதேச விமான பயணிகள் ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பாகவும் வரவேண்டும் என்பது விதியாக உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-