அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,ஜன,3:
பெரம்பலூரில் இஸ்லாமிய குடும்பத்தினர் மூன்றாம் தலை முறையாக சண்டை சேவல்களை வளர்த்து வருகின்றனர்.
தமிழர்களின் பாரம் பரிய விளையாட் டுகளில் ஒன்று சேவல் சண்டை. மூவேந்தர்கள் ஆட்சி செய்த தமிழ் மண்ணில் 16 ம் நூற்றாண்டில் தான் சேவல் சண்டை பிரபலமடைந்தது. போர் இல்லாத நேரங்களில் வீரர்கள் சோர்ந்து விடாமலிருக்க இந்த சேவல் சண்டை நடத்தப் பட்டுள்ளது. சேவல் சண்டையின் போது சேவல் கால்களில் கத்தியைக் கட்டி, ஒன்றோ டொன்று மோத விட்டு போர்வீ ரர்கள் பொழுது போக்கினர். இவ்வாறு சேவல் சண்டையிடும் களம் ‘சாவக்கட்டு ’ என்று இன்றளவும் தமிழகத்தின் பல இடங்களில் மருவி அழைக்கப்படுகி றது.


மன்னர் காலத்தில் தொடங்கிய இந்த சேவல் சண்டை தமிழரின் கலாசாரமாக இன்றளவும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின்போது தொடந்து நடந்து வருகிறது. தஞ்சை, பட்டுக் கோட்டை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், அரவக்குறிச்சி, கோவை உள்ளிட்ட பல பகு திகளில் சேவல் சண்டை போட்டி பிரபலமான ஒன்றாகும். கால்களில் கத்தியைக் கட்டி சேவல்களை மோதவிடுவதால் சேவல்கள் அதிகம் இறப்பதாலும், ரத்தம் சிந்திய படி கோரமாக சண்டை யிடுவதால், மிருகவதை தடுப்புச் சட்டத்தை காரணம் காட்டி கத்திக் கட்டி சண்டையி டும் முறைக்கு அரசு தடை விதித்தது.
இருந்தும் நீதி மன்ற அனுமதியுடன், கலெக்டரின் அ றிவுரைப் படி தற்போது சேவல் சண்டைப் போட்டி கத்தி கட்டப்படாத, வெற்றுக் கால் சேவல் சண்டைப் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிக்கென நூரி, ஜாவா, சீத்தா, யாகூத்து, கதர்யா கூத்து, தும்மரி யா குத்து, பட்டேலா உள் ளிட்ட 20க்கும் மேற் பட்ட சண்டைச் சேவல் வகைகள் பயன்படுத்தப்படுகின் றன. 
இந் நிலை யில் தமிழகத்தின் மையப் பகுதியான பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை காளைகளை விரட்டும் ஜல்லிக் கட்டோ, சேவல்கள் மோதும் சாவக் கட்டோ பெரிதாக நடத்தப்படவில்லை. ஆனால் வெளி மாவட்ட ஜல்லிக் கட் டுகளில் பங்கேற்கும் காளை களை விசுவக்குடி, அன்ன மங்கலம், பூலாம் பாடி, கடம்பூர், கள்ளப்பட்டி பகுதிகளில் 50க்கும் மேற்பட் டோர் வளர்த்து வருவது போல், பெரம்பலூரில் வெளிமாநிலங்களில், வெளி மாவட் டங்களில் சேவல் சண்டைகளில் பங்கேற்கும் 50க்கும் மேற் பட்ட வீரமுள்ள சேவல் களை இஸ்லாமிய குடும்பத்தார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கிறார்கள் என்பது பலருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் காமராஜர் வளைவுக்கு கிழக்கே டூவீலர் பட்டரை வைத்திருப்பவர் பாபு என்கிற உசேன் பாபு(35). வடக்கு மாதவி சாலை, தில்லை நகரில் குடியிருக்கும் இவரது அப்பா அப்துல்வாஹித்(65), அவ ரது அப்பா அப்துல் ஜலீல்(95). 30 ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா வளர்க்கத் தொடங்கிய சண்டை சேவல்கள், வழிவழி யாக பேரன்களால் பின்பற்றப் பட்டு வருகிறது. பாபு வின் வீட்டில் பட்டியாலா, தும்மர், நூரி, கதிர், யாகூத், கதிர்யாகூத், ஜாவா, கதிர் ஜாவா வகையிலான 50க்கும் மேற்பட்ட சேவல்கள் வளர்க்கப் பட்டு வரு கின்றன.
இது குறித்து பாபு தெரிவித்ததாவது: சண்டை சேவல் களை எங் கள் குடும் பத் தி னர் 30 ஆண் டு க ளாக வளர்த்து வரு கி றோம். என் னோடு எனது உற வி னர் கள் பிஇ பட்ட தாரி க ளான முக மது பாரூக், முக மது ரபீக் ஆகி யோ ரும் சேவல் வளக் கின் ற னர். ஆந் திரா, கர் நா டகா, தமி ழ கத் தில் மதுரை, கரூர், புதுக் கோட்டை, தஞ் சை யென பல் வேறு மாவட் டங் க ளில் நடத் தப் பட்ட போட் டி க ளில் பங் கேற்க செய் துள் ளோம். விரை வில் தஞ்சை சீனி வா ச பு ரம், சூரக் கோட்டை, பட் டுக் கோட்டை, மதுரை, பெங் க ளூரு, ஆந் திரா பகு திக ளுக்கு செல் ல வுள் ளோம். இது வரை சேவல் களை கால் க ளில் கத் தி கட்டி போட் டி க ளில் விளை யாட அனுப் பி ய தில்லை. பயிற் சி யில் கூட கால் க ளில் துணி க ளைக் கட் டித் தான் பயிற்சி அளிக் கி றோம்.
30 வரு டங் க ளாக கையா ளப் ப டும் பாரம் ப ரிய கோழி களை வைத்து, அதன் மூ லமே இனப் பெ ருக் கம் செய் யச் செய்து, வீரி ய முள்ள புதி ய ரக சேவல் க ளைக் கண் ட றிந்து தனித் த னி யாக வளர்த்து வரு கி றோம். போட் டி யி லும், பயிற் சி யி லும் ஏற் ப டும் உடல் வலிக ளைக் கூட உணர்ந்து நல் லெண்ணை, மஞ் சள் கலந்த பத் தை யைத் த டவி மறு நாளே எழுந்து கூவும் படி கவ ன மா க வும், வீரத் தோ டும் வளர்க் கி றோம். களத் தில் இறங் கி னால் நிச் ச யம் வெற் றி யோ டு தான் திரும் பும். முடி யா விட் டால் ஆடு க ளத் தி லேயே எங் கள் சேவல் அமர்ந்து கொள் ளுமே, தவிர ஒரு நாளும் புறமுதுகு காட்டாதெனப் பெருமையோடு தெரிவிக்கிறார்.
பெரம்பலூரில்
வளர்க்கும் இஸ்லாமிய குடும்பத்தினர்
பொங்கல் பண்டிகையையொட்டி, கத்தியின்றி வெற்றுக்கால் சேவல் சண்டை நடத்த அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை தில்லைநகரில் சேவல்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-