அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

Avoid 2AQ and 8AC serial number notes: RBI notificationமும்பை: ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால், இரு சீரியல் எண்கள் கொண்ட நோட்டுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ஆர்.பி.ஐ ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் திட்டத்தோடு, பாகிஸ்தானில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள, ஆயிரம் ரூபாய், கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து நடந்த விசாரணைகள் முடிவில், இரு சீரியஸ் எண்கள் கொண்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும், சுற்றறிக்கைவிடுத்துள்ளது. 

2AQ மற்றும் 8AC ஆகிய இரு சீரியசில் தொடங்கும் எண்கள் கொண்ட ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை தவிர்க்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம், யாரிடமாவது இதுபோன்ற நோட்டுக்கள் இருந்தால் அதை வங்கிகளிடம் அளித்தால், வேறு பணம் திருப்பி தரப்படுமா என்பது குறித்தோ, அல்லது அந்த பணம் பறிமுதல் செய்யப்படுமா என்பது குறித்தோ ஆர்.பி.ஐ வெளியிட்ட சுற்றறிக்கையில் தகவல் இல்லை.
Avoid 2AQ and 8AC serial number notes: RBI notification

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-