அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய்: இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக துபாயில் 2 நாட்கள் இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. துபாய் இந்திய துணை தூதர் அனுராக் பூஷன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, வரும் 26ந்தேதி இந்தியாவின் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தாயாகத்தின் குடியரசு தின விழா, சுந்ததிர தின விழா ஆகியவற்றை சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர். எனவே வருகிற 26ந்தேதி இந்தியாவின் 67வது குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்தில் துபாயில் முதல்முறையாக 2 நாட்கள் 25ந்தேதி மற்றும் 26ந்தேதிகளில் துபாயில் உள்ள இந்திய பள்ளி வளாகத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடபட உள்ளது.
கடந்த ஆண்டு இந்திய துணை தூதரகத்தின் சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி துபாய் வந்த போது இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி,யோகா நிகழ்ச்சிகல் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்றனர்.

அதே போன்று மிக சிறப்பாக இந்த 2 நாள் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வரும் 25ம்தேதி காலை 9 மணியளவில் துபாய் இந்திய பள்ளியில் இந்திய குடியரசு தினவிழாவையோட்டி தேசபக்தி குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் இதில் இந்தியா மற்றும் அமீரகத்தை சேர்ந்த பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கேற்கலாம். 26ந்தேதி காலை 8 மணிக்கு இந்திய தூதரக வளாகத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. காலை 8 30க்கு இந்நிகழ்ச்சி நடைபெறும் பின்னர் பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி 12 மணி வரை நடைபெறும்.

மாலை 5 மணிக்கு துபாய் இந்திய பள்ளி வளாகத்தில் இந்திய கலை விழா நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கு நடன நிகழ்ச்சிகள் ,இந்திய உணவு வகைகள் இடம்பெறும் ஸ்டால்கள், உள்ளிட்டவை இடம்பெறும். இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் சேவாக் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வாய்ப்புள்ளது.எனவே அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்திய பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு குறித்து இந்திய பள்ளியின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் அசோக் குமார் தெரிவித்தார் .பேட்டியின் போது இந்திய துணை தூதரக அதிகாரி முரளீதரன் உடனிருந்தார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-